Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது- ஸ்டாலின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்கம் இயக்கம் சார்பில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. புத்தொழில் தொடங்கும் தகுதியான 31 நபர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஆதார நிதியை முதல்வர் வழங்குகிறார்.

Tamil Nadu is an easy state to do business innovation conference in Chennai says CM Stalin

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் காப்பகங்கள் கண்காட்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தொழில் சம்பந்தப்பட்ட அரங்குகள் மட்டுமின்றி மருத்துவம் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. நீரழிவு நோய், ரத்த கொதிப்பு மட்டுமின்றி பெண்கள் உடல் சார்ந்த பல்வேறு நோய்களை கண்டறிய நவீன முறையிலான மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளும் உபகரணங்களும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

சென்னையில் உள்ள பல்வேறு ஆஸ்பத்திரிகளின் பிரதிநிதிகளும் இங்கு அரங்கம் அமைத்து இருந்தனர். உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து பல்வேறு கண்டுபிடிப்புகளை விளக்கி கூறினார்கள். மனித சிறுநீரில் இருந்து உரம் தயாரிப்பது, மக்காத குப்பையில் இருந்து எண்ணை தயாரிப்பது உள்பட புது புது கண்டுபிடிப்புகளும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த அரங்குகள் ஒவ்வொன்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். அவருக்கு அங்கிருந்த பிரதிநிதிகள் விரிவாக விளக்கம் அளித்து எடுத்து கூறினார்கள். அப்போது அவருடன் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

அதன் பிறகு கருத்தரங்கு நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமை தாங்கினார். இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதில் அரசு துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

கருத்தரங்கத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தொழில் புரிய எளிதான மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 14 ஆம் இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து 2 மாநாடுகள் நடைபெற உள்ளன. இந்த நிதியாண்டு இறுதியில் 2 மிகப்பெரிய மாநாடுகள் நடத்த திட்டமிடப்படுள்ளது என்றார்.

Recommended Video

    Tamilnadu Model என்ன சொல்கிறது ? | மாநிலங்கள் மோதும் மாடல் அரசியல் *Tamilnadu

    இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான புத்தொழில் காப்பகங்கள் இயங்கி வருகின்றன.தமிழ்நாட்டில் அனைத்து துறைகளும் முன்னோக்கிய பாய்ச்சலில் போய்க் கொண்டிருக்கிறது.நான் முதல்வன் திட்டத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+