டேட்டாவால் தூக்கியடிக்கும் ஸ்டாலின்-போட்டோவால் தெறிக்க விடும் உதயநிதி! வீடியோவால் வெளுக்கும் இபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: லோக்சபா தேர்தல் பிரசாரம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் படு உக்கிரமாக அனல் பறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு கட்சியின் தலைவரும் ஒவ்வொரு பாணியில் சக எதிர்க்கட்சிகளை வெளுத்தெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளன. தமிழ்நாட்டில் அனல் பறந்து கொண்டிருக்கிறது லோக்சபா தேர்தல் பிரசாரம். திமுகவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுகவில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசார கூட்டங்களுக்கு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் திரள்கின்றனர். ஒவ்வொரு தேர்தல் பிரசார பொதுக் கூட்டமும் மாநாடு போல களை கட்டுகிறது.

Tamil Nadu Leaders MK Stalin Edappadi Palaniswami campaign with Data Photo Videos

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சரமாரியாக புள்ளி விவரங்களை அடுக்குகிறார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோரை கச்சத்தீவு விவகாரத்தில் விடாமல் வெளுத்தெடுக்கிறார். மோடியையும் நிர்மலா சீதாராமனையும் வெள்ள நிவாரண விவகாரத்தில் துவைத்தெடுக்கிறார். தமிழ்நாட்டுக்கான உரிய வரி பங்கு தரவில்லை என ஆணித்தரமாக அடுக்குகிறார். ரூ1 கொடுத்தால் 29 பைசாதான் மத்திய அரசு திருப்பித் தருவதை டேட்டா விவரங்களுடன் வெளுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

திமுகவின் பிரசார பீரங்கியாக உருவெடுத்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த தேர்தல் களத்தை பெரும் கலகலப்பாக்கி வைத்ததே போட்டோக்கள் மூலம்தான். கடந்த சட்டசபை தேர்தலில் ஒற்றை செங்கல்லை தூக்கி அதகளப்படுத்திய உதயநிதி ஸ்டாலின் இம்முறை அதிமுக, பாஜகவின் மறைமுக கூட்டணியை சொல்லும் போட்டோக்கள், மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கும் போட்டோக்கள் என வரிசை கட்டி விளையாடி வருகிறார்.

திமுகவுக்குதான் பேசத் தெரியுமா? எங்களுக்கும் தெரியும்.. நாங்களும் திராவிட கட்சிதானே என பதிலுக்கு பதிலடியாக தருகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. திமுகவினர் போட்டோதான் காட்டுகிறார்கள்.. இதோ நாங்கள் வீடியோவையே ரிலீஸ் செய்கிறோம் என ஒவ்வொரு மேடையிலும் திமுகவை விமர்சிக்க வீடியோவை ஸ்கிரீனில் ஒளிபரப்பு செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் ஒரு படி மேலே போய் முதல்வர் ஸ்டாலின் புகார் பெட்டி என தயாரிக்கப்பட்ட பெட்டியை மேடையிலேயே வைத்து டெமோ காட்டி விமர்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதனால் தமிழக தேர்தல் களம் வாக்குப் பதிவை நெருங்க நெருங்க உக்கிரமாகிக் கொண்டே போகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+