மின்னல் வேகத்தில் கொரானா... ஆனால்.. தமிழகத்தில் முழு ஊரடங்கு வேண்டாம்! மா.சுப்ரமணியன் உறுதி
தமிழகம் முழுவதும் இப்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளே போதும் என்றும் முழு லாக்டவுன் அமலாக வாய்ப்பில்லை என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை:
தைப் பொங்கலுக்குப் பின்னர் தொடர்ச்சியாக முழு லாக்டவுன் அறிவிக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இப்போது உள்ள கட்டுப்பாடுகளே போதும் என்றும் மக்களின் வாழ்வாரத்தைக் கருத்தில் கொண்டு முழு லாக்டவுன் அறிவிக்கப்பட மாட்டாது என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா மூன்றாவது தீவிரமாக வீசத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தினசரியும் 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையில் தினசரி பாதிப்பு 8ஆயிரம் பேராக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 6ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர ஊடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
தைப்பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார சரிவில் இருந்து மக்கள் படிப்படியாக மீண்டு வரும் நிலையில் மற்றொரு முழு லாக்டவுனை எப்படி எதிர்கொள்வது என்று மக்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு இல்லை என்று விளக்கம் அளித்து உள்ளார் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.

மா.சுப்ரமணியன் ஆய்வு
திருவான்மியூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவியை அமைச்சர் சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமிழகத்தில் தினசரி 2000 பாதிப்பு அதிகமாக வருகிறது. ஆனால் பாதிக்கப்படுபவர்கள் மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம் என்று கூறினார்.

26 ஆயிரம் பேருக்கு சிகிச்சை
வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை மாலை பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்கு கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று கூறினார். சென்னையில் 26 ஆயிரம் பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ள நிலையில் இதில் சுமார் 21987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

178 தன்னார்வலர்கள்
இணை நோய் உள்ளவர்கள் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம். லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம். சென்னையில் வீட்டு தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க 178 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

முழு ஊரடங்கு வருமா
மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்பட கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார் அதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கிறார். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது என்றும் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். பொங்கலுக்கு பிறகு தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்க வாய்ப்பு இல்லை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications