ரேஷன் அட்டைதாரர்கள் நோட் பண்ணுங்க.. 2026-ல் கடை விடுமுறை நாட்கள் இவைதான்.. அரசு வெளியிட்ட அறிவிப்பு!
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு மொத்தம் 23 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 26 ஆயிரத்து 618 முழுநேர கடைகள், 10 ஆயிரத்து 710 பகுதிநேர கடைகள் என மொத்தம் 37 ஆயிரத்து 328 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. தமிழக ரேஷன் கடைகளில், 2.21 அரிசி கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கோதுமை, பருப்பு, உப்பு, சேமியா உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு 2026-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் கடை பணியாளர்கள் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் வகையில், மொத்தம் 23 நாட்கள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. 2026-ல் இந்த நாள்களில் ரேஷன் கடைகள் இயங்காது.
2026-ம் ஆண்டு விடுமுறை பட்டியல்
ஜனவரி 1: ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15: பொங்கல் பண்டிகை
ஜனவரி 16: திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17: உழவர் திருநாள்
ஜனவரி 26: குடியரசு தினம்
பிப்ரவரி 1: தைப்பூசம்
மார்ச் 19: தெலுங்கு வருடப்பிறப்பு (யுகாதி)
மார்ச் 21: ரம்ஜான்
மார்ச் 31: மகாவீர் ஜெயந்தி
ஏப்ரல் 3: புனித வெள்ளி
ஏப்ரல் 14: தமிழ் புத்தாண்டு
மே 1: மே தினம் (தொழிலாளர் தினம்)
மே 28: பக்ரீத்
ஜூன் 26: மொஹரம்
ஆகஸ்ட் 15: சுதந்திர தினம்
ஆகஸ்ட் 26: மிலாடி நபி
செப்டம்பர் 4: கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 4: விநாயகர் சதுர்த்தி
அக்டோபர் 2: காந்தி ஜெயந்தி
அக்டோபர் 19: ஆயுத பூஜை
அக்டோபர் 20: விஜயதசமி
நவம்பர் 8: தீபாவளி
டிசம்பர் 25: கிறிஸ்துமஸ்
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications