TN School Holidays: தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆகஸ்ட்டில் எத்தனை நாள் விடுமுறை? லிஸ்ட் இதோ!
சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பது குறித்த தகவல்கள் தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் யாவும் வார இறுதி நாட்கள், பொது விடுமுறைகள், பண்டிகை கால விடுமுறை ஆகியவை ஆகும். எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதை பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வேலை நாட்கள், விடுமுறை, வகுப்புகள், தேர்வு நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பள்ளி நாட்காட்டி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் 2025- 2026 ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி நாட்காட்டி அண்மையில் வெளியானது.

அதன்படி இந்த ஆண்டு மொத்த வேலை நாட்களின் எண்ணிக்கை 210 ஆகும். இந்த ஆண்டு அனைத்து சனி, ஞாயிறுகளும் விடுமுறை நாட்கள் ஆகும். இந்த நிலையில் ஜூலை மாதம் மொகரம் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வந்ததால் வார நாட்களில் பொது விடுமுறை இல்லாமல் போய்விட்டது.
அது போல் திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தால் தூத்துக்குடி மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தால் மதுரை மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் என்பதால் விருதுநகர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
வார விடுமுறை
அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் இன்று தொடங்கிய நிலையில் எத்தனை நாட்கள் விடுமுறை என்பதை பார்க்கலாம். ஆகஸ்ட் மாதத்தில் 10 நாட்கள் வார விடுமுறையாகிவிடுகிறது. அதாவது ஆகஸ்ட் 2-3, 9-10, 16-17, 23-24, 30-31 ஆகியவை ஆகும்.
பொது விடுமுறை நாட்கள்
ஆகஸ்ட் 15 (வெள்ளிக்கிழமை)- சுதந்திர தினம்
ஆகஸ்ட் 16 (சனிக்கிழமை)- கிருஷ்ண ஜெயந்தி
ஆகஸ்ட் 17 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை
ஆகஸ்ட் 27- புதன்கிழமை- விநாயகர் சதுர்த்தி
எனவே இந்த மாதம் 12 நாட்கள் விடுமுறையாகும். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்கள்.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications