"தமிழ்நாட்டுக்கு தனி கொடி.. அது அனைத்து வீடுகளிலும் பறக்க வேண்டும்!" அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு நாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டிற்கெனத் தனி மாநில கொடி உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் தாய்மொழியான தமிழ் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.

தவெக அரசு தரப்பில் இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியக அரங்கில் 'தமிழ்நாடு நாள்' விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வன்னி அரசு, விஜயலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tamil Nadu State Flag Demand Aadhav Arjuna Tamil Nadu

தமிழ்நாட்டிற்கு தனி கொடி

அப்போது பேசிய அமைச்சர் அதவ் அர்ஜுனா, தமிழ்நாடு பள்ளிகளிலேயே தமிழ் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தார். மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை கட்டாயம் சொல்லி தர வேண்டும் எனவும் இதற்காக சட்டம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசித்து வருவதாக குறிப்பிட்டார். மேலும், தமிழ்நாட்டிற்கு என தனியாக ஒரு கொடியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "இந்தியாவில் எத்தனையோ மாநிலங்களில் அந்தந்த மாநிலத்திற்கென தனித்தனிக் கொடிகள் உள்ளன. அதேபோல தமிழையும் தமிழ்நாட்டையும் முதன்மைப்படுத்தி நமக்கான மாநில கொடியை நாம் உருவாக்க வேண்டும். அந்த கொடியை நவம்பர் 1 மற்றும் ஜூலை 18ஆம் தேதிகளில் நம்முடைய முதலமைச்சரின் கைகளால் முதல்முறையாக ஏற்றி வைக்க வேண்டும்.. ஒவ்வொரு வீடுகளிலும் அந்த கொடியை ஏற்றிப் பறக்கவிட வேண்டும்.

அன்னை தமிழ்

தேசிய கொடிக்கு இணையாக தமிழ் மொழியின் பெருமையை போற்றக்கூடிய ஒரு கொடியை தமிழ்நாட்டிற்காக உருவாக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் இன்று நாம் நிற்கிறோம். நம்முடைய குழந்தைகளுக்கு அன்னை தமிழ் மொழியின் பெருமையை கொண்டுபோய் சேர்க்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.

இன்றைக்கு அனைத்து பள்ளிகளிலும் ஒரு தவறான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது ஆங்கில வழிக் கல்வி படித்தால்தான் வேலைக்கு செல்ல முடியும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மனநிலையை நாம் உடனடியாக மாற்றியமைக்க வேண்டும்.

இருமொழி கொள்கை

அண்ணா வழிகாட்டிய இருமொழி கொள்கை நமக்கு மிகவும் முக்கியமானது. ஆங்கிலம் என்பது வணிகத்திற்கும், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்திற்கும் தேவைப்படும் ஒரு தொடர்பு மொழி. ஆனால், தாய்மொழியாம் அன்னை தமிழை விட்டுவிட்டு, ஆங்கிலம் பேசுவதையே பெருமையாக கருதும் போக்கை நாம் மாற்ற வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றால் பிரெஞ்சுக்காரர்கள் பிரெஞ்சு மொழியில் தான் பேசுவார்கள். சீனாவில் சீன மொழியையும், ஜப்பானில் ஜப்பானிய மொழியையும் அவர்கள் எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை. ஆனால், நம் ஊரில் மட்டும் 50 சதவீதத்திற்கும் அதிகமான பள்ளிகளில் தமிழை கற்றுக் கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். தமிழை ஒரு விருப்பப் பாடமாக மாற்றி வைத்துள்ளனர்.

தமிழ் கட்டாய பாடம்

தமிழ் என்பது விருப்ப பாடம் அல்ல.. அது கட்டாயப் பாடம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்! ஒரு மனிதனுக்கு உணவு, உடை, குடிநீர் எவ்வளவு அவசியமோ, அதேபோல தாய்மொழியும் அவனது அடிப்படை தேவையாக மாற வேண்டும்.

கல்வி என்பது இன்று பெரும் வியாபாரமாக மாற்றப்பட்டுவிட்டது. அதை பற்றி நான் பேசவில்லை. ஆனால் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனர்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி; நீங்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டு, தமிழ் மண்ணில்தான் வியாபாரம் பார்க்கிறீர்கள். அப்படியென்றால், உங்கள் கல்வி நிறுவனங்களில் தமிழை சொல்லி கொடுப்பதை கட்டாயப்படுத்த வேண்டும். இதற்கென தெளிவான சட்டதிட்டங்களை அரசு தீவிரமாக முன்னெடுக்கும்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+