தமிழ்நாட்டிலுள்ள தியேட்டர் ஊழியர்களுக்கும் விடுமுறை..திரையரங்கம் உரிமையாளர்கள் அதிரடி.. தேதி பாருங்க
சென்னை: வாக்குப்பதிவு தினத்தன்று தமிழகத்திலுள்ள தியேட்டர் ஊழியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜுன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வருகிற 19-ம் தேதி, ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்க போகிறது..

அறிவுறுத்தல்: 19 வாக்குப்பதிவு என்பதால், 17-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும். அதனால் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நாளிலிருந்து, வாக்குப்பதிவு நடைபெறும் 19-ந்தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்தது. அதனைத்தொடர்ந்து தமிழக அரசு 3 நாட்கள் டாஸ்மாக் மூடப்படுகிறது. அத்துடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவித்திருக்கிறது.
அதுபோலவே, கோயம்பேடு மார்க்கெட்டும், வாக்குப்பதிவு தினத்தன்று மூடப்படும் என்று அறிவிப்பு வெளியானது.. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் 10000க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களும் வாக்களிக்க ஏதுவாக, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19-ம்தேதி கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை விடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தியேட்டர்கள்: அந்தவரிசையில், தமிழ்நாட்டில் பணியாற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு திரைப்படக் கண்காட்சியாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

"எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் ஊழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்: வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும், பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருக்கிறது.. மேலும் விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது நினைவுகூரத்தக்கது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications