சக்தி வாய்ந்த சூறாவளியாகும் சக்தி புயல்.. தமிழ்நாடு தான் டார்கெட்டே! வெதர்மேன் கொடுத்த வார்னிங்!
சென்னை: அரபிக் கடல் பகுதியில் சக்தி புயல் உருவாகி இருக்கும் சூழலில் கடல் பகுதியில் இருக்கும் போது அது மேலும் தீவிரமடையும் எனவும் ஆனால் அது நிலத்தை நோக்கியே செல்ல விரும்புவதாக கூறியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அதே நேரத்தில் தற்போது அந்த புயல் அரபிக் கடலில் சுற்றித் திரியும் நிலையில் அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும் எனக் கூறியிருக்கிறார். இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. மேலும், இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் இரவு மற்றும் காலை நேரங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.

வானிலை எச்சரிக்கை
குறிப்பாக வட கடலோர தமிழ்நாடு, அதாவது காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை பகுதிகளில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. இதேபோல் தெற்கு தமிழ்நாடு மாவட்டங்கள், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலும் மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேற்கில் உள்ள சேலம், நாமக்கல், கரூர், கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும் சூழ்நிலை உள்ளது.
தமிழ்நாடு கனமழை
டெல்டா மாவட்டங்கள் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாகை, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருவாரூர் பகுதிகளிலும் அதேபோல மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். மேலும், வடக்கு பகுதிகளில் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர் மற்றும் கிருஷ்ணகிரி மேலே உள்ள இடங்களிலும் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
பிரதீப் ஜான்
இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கடலோர பகுதி மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மழை மற்றும் இடியுடன் கூடிய சூழ்நிலையை பொருத்து செல்லும் போக்குவரத்து, பள்ளி, வேலை ஆகியவற்றில் முன்கூட்டிய திட்டமிடல் அவசியம். மேலும், கடலோர பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், மாநில அரசு மற்றும் வானிலை ஆய்வு மையங்களின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சக்தி புயல்
இந்நிலையில், அரபிக் கடல் பகுதியில் சக்தி புயல் உருவாகி இருக்கும் சூழலில் கடல் பகுதியில் இருக்கும் போது அது மேலும் தீவிரமடையும் எனவும், ஆனால் அது நிலத்தை நோக்கியே செல்ல விரும்புவதாக கூறியிருக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்," அரபிக்கடல் பகுதியில் 'சக்தி புயல்' உருவாகியுள்ளது. இது கடலுக்கு மேல் இருக்கும் போது மேலும் தீவிரமடையும். அது வலுவிழக்கும்போது, திசைமாற்றிக் காற்று அதை குஜராத் கடற்கரையை நோக்கித் தள்ளுகிறது. "சக்தி புயல் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி, அது நிலத்தைத் தொட விரும்புகிறது, ஆனால் அந்த புயல் பரந்த அரபிக்கடலில் தனியாக சுற்றித் திரிகிறது. இதனால் அதன் வீரியம் மேலும் அதிகரிக்கும்" எனக் கூறியுள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications