அடுத்த 3 மணிநேரம்.. 6 மாவட்டங்களில் இடியுடன் வெளுக்கும் மழை.. எங்கெங்கு?.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது. வடகிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் கூட பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வருகிறது.
இதனால் தமிழ்நாட்டில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் பல மாவட்டங்களில் சூரியனை பார்க்க முடியாத நிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு அவ்வப்போது கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

உருவாகிய காற்றழுத்தம்
இந்நிலையில் தான் தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த 2 நாட்களாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் ஓய்வெடுத்த மழை மீண்டும் தீவிரம் காட்டலாம் என கூறப்படுகிறது. அதாவது தற்போது வங்க கடலின் வடக்கு அந்தமான் பகுதியில் ஒரு காற்றழுத்தம் உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெறும் வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

நேரடி தாக்கம்
மேலும் கேரள பகுதிகளின் மேல் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது தமிழ்நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கீழடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டில் ஆங்காங்கே லேசானது முதல் மிதமான மழைபெய்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை இந்த நிலை நீடிக்கும் நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தம் வலுப்பெற்று தமிழக கடலோர பகுதிக்கு நெருங்கி வந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதனால் தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம். .

அடுத்த 3 மணிநேரம் முக்கியம்
இந்நிலையில் தான் இன்று காலை வானிலை ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலைஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
மேலும் இன்று முதல் நவம்பர் 19ம் தேதி வரை தமிழகம் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீச உள்ளது. மணிக்கு 55 கிலோமீட்டர் முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீச உள்ளது. இதனால் இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை












Click it and Unblock the Notifications