ஏ..எங்கிட்டேவா? என்னோட இன்னொரு அவதாரத்தை பார்க்கனுமா? சீமானை 'பாட்ஷா' பாணியில் மிரட்டிய வீரலட்சுமி!
சென்னை: தமது இன்னொரு அவதாரத்தை காட்டினால் தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சியினர் நடமாடவே முடியாது என அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் அவருக்கு தொடக்கத்தில் இருந்து ஆதரவாக இருந்து வருபவர் வீரலட்சுமி. விஜயலட்சுமிக்காக சீமான் வீடு, அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் அறிவித்தார். ஆனால் விஜயலட்சுமி வேண்டுகோளுக்காக அந்த போராட்டத்தை கைவிட்டார் வீரலட்மி.

இதனைத் தொடர்ந்து சென்னை போலீசில் விஜயலட்சுமி மீண்டும் சீமான் மீது புகார் கொடுக்கும் போது உடன் இருந்தார் வீரலட்சுமி. இந்த புகார் கொடுத்த கையோடு, விஜயலட்சுமிக்கும் வீரலட்சுமிக்கும் இடையே மோதல் வெடித்தது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகின.
இருந்த போதும் விஜயலட்சுமியுடன் ஏதோ ஒரு வகையில் இணக்கமான போக்கையே வீரலட்சுமி வெளிப்படுத்தி வருகிறார். இதனால் நாம் தமிழர் கட்சியினர், வீரலட்சுமி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூட வீரலட்சுமியை சீமான் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியினர் மீது வீரலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க நேற்று சென்றார். அப்போது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமியுடன் மல்லுக்கட்டினர்- சாலை மறியல் போராட்டம் நடத்தினர். வீரலட்சுமியே வெளியே வா என்றெல்லாம் முழக்கமிட்டனர்.
இதன்பின்னர் போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் வீரலட்சுமி கூறியதாவது: சீமான் தொடக்க காலத்தில் திராவிடர் கழக மேடைகளில்தான் பேசினார்; அவர்கள் கொடுத்த சாப்பாட்டைதான் சாப்பிட்டர்; அவர்கள் வாங்கி கொடுத்த உடையைத்தான் போட்டுக் கொண்டார்.
எனக்கு என ஒரு அவதாரம் இருக்கு. நான் சிங்கிளா வந்து போறேன்னு நினைக்காதீங்க.. இன்னொரு அவதாரத்தை தரிச்சன்னா, நீங்க நாம் தமிழர் கட்சி, ஒரு கட்சியே நடத்த முடியாது. இந்த சீன் எல்லாத்தையும் 17 வயதிலேயே நான் பார்த்துவிட்டேன். என்னுடைய இன்னொரு அவதாரத்தை பார்த்தால் நாம் தமிழர் கட்சியினர் தாங்கமாட்டார்கள். இவ்வாறு வீரலட்சுமி எச்சரிக்கை விடுத்தார்.
இதனிடையே வீரலட்சுமி விவகாரத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications