திடீரென டெல்லிக்கு போகும் ஆதவ் அர்ஜுனா.. பின்னாடி பயங்கரமான 2 காரணங்கள்.. இது விஜய்க்கு தெரியுமா?
சென்னை: த.வெ.க. ஆதவ் அர்ஜுனா, திடீரென்று இன்று காலையில் சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு செல்வதாகவும், பிரசாந்த் கிஷோரை தனிப்பட்ட முறையில் சந்திக்கச் சென்றுள்ளதாகவும் இரு வேறு விசயங்கள் த.வெ.க. தரப்பில் சொல்லப்படுகிறது.

பிகே ஆதவ் அர்ஜுனா
சமீபத்தில் பிரஷாந்த் கிஷோர் உடன் நடந்த சந்திப்பில் நடிகர் விஜயிடம் அவர் முக்கியமான ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. .. விஜயை சந்தித்த பிரஷாந்த் கிஷோர்.. தமிழ்நாட்டில் திமுக அதிமுகவின் வாக்கு வங்கி சேர்த்து மொத்தமாக 60-70% உள்ளது. ஆனால் விஜய் இதை 60%க்கும் கீழ் கொண்டு வருவார். விஜயின் கட்சிக்கு மட்டுமே மட்டுமே அதிமுக - திமுகவின் கூட்டு வாக்கு வங்கியை உடைக்கும் சக்தி உள்ளது என்று பிகே கூறி உள்ளாராம். கட்சியை நிர்மாணிப்பது தொடர்பான ஆலோசனைகளை மட்டும் பிரஷாந்த் கிஷோர் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.
த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை ஆதவ் அர்ஜுனா கவனிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது போக பிரஷாந்த் கிஷோரை உள்ளே கொண்டு வந்ததும் ஆதவ் அர்ஜுனாதான் என்று கூறப்படுகிறது. அதாவது கட்சியை நிர்மாணிக்க, அடிப்படையை உருவாக்க பிரஷாந்த் கிஷோர்.. த.வெ.க.வின் தேர்தல் வியூகப்பணிகளை கவனிக்க ஆதவ் அர்ஜுனா.. விஜய்க்கு பர்சனல் அரசியல் ஆலோசனை வழங்க ஜான் ஆரோக்கியசாமி ஆகிய மும்மூர்த்திகள் இருப்பார்கள். , ஆதவ் அர்ஜுனாவும் ஜானும் இணைந்து பணியாற்ற வேண்டும் என விஜய் விரும்புகிறாராம். இதனால் விஜய்க்கு பர்சனல் அரசியல் ஆலோசனை, பர்சனலாக விஜய்க்கு அரசியல் ரீதியாக எப்படி பேச வேண்டும்.. எப்படி நடக்க வேண்டும் என்பது பற்றிய ஆலோசனைகளை ஜான் ஆரோக்கியசாமி வழங்குவார் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ராதாவின் டெல்லி பயணம் கவனம் பெற்றுள்ளது.
ஆதவ் டெல்லி பயணம்
த.வெ.க. ஆதவ் அர்ஜுனா, திடீரென்று இன்று காலையில் சென்னையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுள்ளார். தேர்தல் ஆணையத்திற்கு செல்வதாகவும், பிரசாந்த் கிஷோரை தனிப்பட்ட முறையில் சந்திக்கச் சென்றுள்ளதாகவும் இரு வேறு விசயங்கள் த.வெ.க. தரப்பில் சொல்லப்படுகிறது.
முக்கியமாக அதிமுக - பாஜக கூட்டணி உருவாகும் நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் டெல்லி பயணம் கவனிக்கப்படுகிறது. சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றதற்கு பின் விஜய் ஒரு முக்கிய காரணம் என்று அதிமுக தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக விஜய் சொன்ன ஒரு வார்த்தைதான் எடப்பாடி பழனிசாமியின் பாஜக கூட்டணி முடிவிற்கு காரணம் என்கிறார்கள்.
தமிழக அரசியலில் மீண்டும் பழைய கூட்டணி உருவாக போகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு கடுமையான போட்டியாக இருந்த அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் திரும்ப உள்ளது. எடப்பாடி இந்த முடிவை எடுப்பதற்கு முன் பல முக்கியமான முயற்சிகளை எடுத்து பார்த்துவிட்டு அது தோல்வி அடைந்த காரணத்தினாலேயே இந்த முடிவிற்கு வந்தார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணியை முறிக்க எடப்பாடி தீவிரமாக முயன்றார். காங்கிரசை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வர தீவிரமாக காய் நகர்த்தினார். இதற்கான பணிகளை செய்தார். டெல்லியில் பேசினார். ராகுல் காந்திக்கு தூதுவிட்டார். ஆனால் காங்கிரஸ் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் அந்த முடிவை எடப்பாடி கைவிட்டார். இரண்டாவதாக தேசிய கட்சி அல்லாத தனி கூட்டணியை உருவாக்க முயன்றார். முக்கியமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெளியே கொண்டு வர தீவிரமாக முயன்றார். திமுக கூட்டணியில் இருந்து அவர்களை வெளியே கொண்டு வந்து.. அதிமுக கூட்டணியில் இணைக்க தீவிரமாக முயன்றார். ஆனால் திருமா திமுகவின் வெற்றி கூட்டணியில் தொடர்வதில் உறுதியாக இருந்துவிட்டார்.
இதற்கு அடுத்துதான் விஜய் உடன் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தையை தொடங்கினார். தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. என்கிறார்கள். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். விஜயின் இந்த துணிச்சல்.. அதாவது புதிய கட்சியை தொடங்கிவிட்டது.. பெரிய பாரம்பரியம் உள்ள கட்சியிடம் பாதிக்கு பாதி சீட் பதவி கேட்டதை பார்த்து எடப்பாடி விக்கித்து போய் இருக்கிறார்.
அதோடு இன்னொரு பக்கம்.. அப்படியே எல்லாம் ஓகே என்றாலும் இப்போது கூட்டணியை உறுதி செய்ய மாட்டேன். ஜனநாயகன் படம் வெளியாகி.. கடைசியாக ஜனவரிக்கு பின்பே சொல்வேன் என்று விஜய் கூறி உள்ளார். இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை
விஜயின் போக்கு சரியில்லை என்பதால்தான்.. இனியும் காத்திருக்க வேண்டும்.. பாஜகவோடு சமாதானமாகி போய்விடலாம் என்று டெல்லி கதவை அவர் தட்டியதாக கூறப்படுகிறது.
-
CV சண்முகம் என்ன பண்றார்.. கண்காணிக்க ஆள் போட்ட எடப்பாடி! உடனே போனை போட்ட வேலுமணி! மாட்டுனா மட்டன்! -
மிதுன் பழனிசாமியை அரசியலுக்கு அழைத்து வர எடப்பாடி பழனிசாமி டிராமா ஆடுகிறார்.. சிவி சண்முகம்! -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
"எங்கே சென்றது சிங்கப்பெண் அதிரடி படை?" கும்மிடிப்பூண்டி வழக்கில் இபிஎஸ், அன்புமணி கண்டனம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
செங்கோட்டையன் பாணியில் களமிறங்கிய சிவி சண்முகம்.. திடீரென எடப்பாடிக்கு எதிராக கொந்தளிப்பது ஏன்?












Click it and Unblock the Notifications