தமிழகம் நான் பிறந்த மாநிலம்.. நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது.. தமிழிசை விளாசல்
சென்னை: தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை திநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆத்மா அறக்கட்டளை சார்பில் டிஜிட்டல் மேமோகிராபி எனும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் இயந்திரத்தை புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில், நான் இறைவனை வேண்டி கொண்டு தான் மருத்துவ கருவிகளை ஆரம்பித்து வைப்பேன். இந்த டிஜிட்டல் மெமோகிராபி நிறைய பேருக்கு பரிசோதனைக்கு பயன்பட வேண்டும். அதில் யாருக்கும் மார்பக புற்றுநோய் இருக்கிறது என்ற ரிசல்ட் வரவே கூடாது.

பணம் இல்லை
பணம் இல்லை என்பதற்காக யாரும் சிகிச்சை இல்லாமல் உதாசீனப்படுத்தப்படக் கூடாது. உயிரை காப்பாற்ற நான் என்ன வேலை செய்ய வேண்டும் என்றாலும் செய்வேன். நோய் இருப்பது தெரிந்த பிறகும், மார்பக புற்றுநோய் முற்றி உயிரிழந்தவர்கள் ஏராளம். எனவே புற்றுநோய் குறித்து ஒரு சின்ன அறிகுறி தெரிந்தாலும் உடனே மருத்துவரை அணுகிவிடுங்கள்.

ஆளுநர் மாளிகை
தெலுங்கானாவில் உள்ள ஆளுநர் மாளிகை பிங்க் நிறத்தில் மாற்றியதற்கு காரணே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்! தெலுங்கானாவில் ஆளுநர் மாளிகையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. அப்போது ஆளுநர் மாளிகை முழுவதும் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. தெலுங்கானாவில் உள்ள ஆளுநர் மாளிகை பிங்க் நிறத்தில் மாற்றியதற்கு காரணே மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான்! தெலுங்கானாவில் ஆளுநர் மாளிரையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது. அப்போது ஆளுநர் மாளிகை முழுவதும் பிங்க் நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

பிங்க் நிறம்
இந்தியாவிலேயே முதல்முறையாக பிங்க் நிறத்தில் மாற்றப்பட்ட ஆளுநர் மாளிகை தெலுங்கானா ராஜ்பவன் மட்டும். இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அங்கு ஆளும் கட்சி கொடியின் நிறம் பிங்க் என்பதால்தான் நான் ஆளுநர் மாளிகைக்கு பிங்க் நிற பெயிண்ட் அடித்ததாக விமர்சித்தார்கள். பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நிறம் மாற்றமே தவிர, வேறு எதற்காகவும் அல்ல என்று நான் அப்போது கூறியிருந்தேன்.

தலையெழுத்து
ஆளுநரின் தலையெழுத்தை இந்த கையெழுத்து மாற்ற முடியுமா என எனக்கு தெரியவில்லை. கருத்து சொன்னார் என்பதற்காக ஆளுநரை திரும்ப பெற வேண்டுமா. ஒவ்வொரு கருத்திற்கு ஒவ்வொரு ஆளுநரை திரும்பப் பெற்று கொண்டே இருப்பீர்களா. எரிமலையாக இருப்பதைவிட இயற்கையாக மகிழ்ச்சியாக நல்ல அருவிகளோடு மழையாக மலர் கொத்துக்கள் கொடுக்கக் கூடிய மலையாக இருந்துவிட்டு போங்க.

நான் பிறந்த மாநிலம்
தமிழகம்தான் நான் பிறந்த ஊர், பிறந்த மாநிலம், தமிழகத்தில் நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழிசைக்கு தமிழகத்தில் பேசுவதற்கு உரிமை இல்லை என சொல்வதற்கு யாரும் உரிமை கிடையாது என தமிழிசை பேசியிருந்தார். ஆளுநர் தமிழிசையை கண்டித்து முரசொலியின் சிலந்தி கட்டுரையில் காட்டமாக விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டிருந்தது. தெலுங்கானாவில் தமிழிசையின் ஜம்பம் செல்லுபடியாகவில்லை என்பதற்காக தமிழகத்தில் மூக்கை நுழைகிறார் என விமர்சிக்கப்பட்டார்.

முரசொலி
இதற்கு தமிழிசை நேற்றைய தினம் முரசொலிக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில் சிலந்தி பெயரில் உள்ள மூட்டை பூச்சிகளே, வீட்டில் தெலுங்கு பேசும் நீங்கள் அன்னியரா நான் அன்னியரா, நான் தமிழ் பேசும் தமிழச்சி, தெலுங்கு பேசும் நீங்கள் தமிழை வளர்த்தெடுப்பதாக வேஷம் போடுகிறீர்கள், உங்கள் சாயம் வெளுக்கிறது என காட்டமாக ஆளுநர் தமிழிசையும் விமர்சித்திருந்தார்
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications