சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்த ஸ்டாலின்.. யார், யாருக்கு விருது?.. முழு விவரம்!
சென்னை: நாட்டின் சுதந்திரதின விழாவையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி கவுரவித்தார். கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
Recommended Video
நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகாலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோட்டையில் முதன்முதலாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றினார்.
இதன்பின்னர் தமிழக மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் மு.ஸ்டாலின் முதன்முதலாக தேசியக்கொடி ஏற்றும் வாய்ப்பை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். தமிழ்நாட்டை இந்தியாவுக்கே முன்மாதிரியாக மாற்றியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்தார்.

மருத்துவர் சண்முகப்பிரியா
இதனை தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதன் விவரம் பின்வருமாறு:- கொரோனாவால் உயிரிழந்த மதுரை மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. சண்முக பிரியாவின் கணவர் சண்முக பெருமாள் இந்த விருதினை பெற்றுக் கொண்டார். பெற்றார். துணிச்சலான மருத்துவ சேவைக்கான இந்த விருது வழங்கப்பட்டது.

அப்துல் கலாம் விருது
பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் லட்சுமணனுக்கு அப்துல் கலாம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. சிறந்த மூன்றாம் பாலினத்தவருக்கான விருது திருநங்கை கிரேஸ் பானுவுக்கு வழங்கப்பட்டது. சமூக சேவைக்கு சிறந்த தொண்டாற்றியதற்காக டாக்டர் சாந்தி துரைசாமிக்கு ஔவையார் விருது வழங்கப்பட்டது. 3 பேருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது. சென்னை மாநில கல்லூரிக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், நில நிர்வாக ஆணையர் ஜெ.பார்த்திபனுக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.

சிறந்த தொண்டு நிறுவனம்
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள், நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. திருச்சி ஹோலி கிராஸ் தொண்டு நிறுவனத்துக்கு சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறந்த சேவை புரிந்ததற்காக மருத்துவர் விருது சென்னை பத்மபிரியாவுக்கு வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் விருது நெல்லையை சேர்ந்த மரிய அலாசியஸ் நவமணிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.

தஞ்சாவூருக்கு விருது
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, கடலூர் அரசு மருத்துவமனை, சாயல்குடி அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டது. உதகை(முதல் பரிசு), திருச்செங்கோடு(2-ம் பரிசு) , சின்னமனுருக்கு(3-ம் பரிசு) சிறந்த நகராட்சிகளுக்கான விருது வழங்கப்ட்டது. சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூருக்கு விருது வழங்கப்பட்டது. இது தவிர சாதனை புரிந்த பல்வேறு தரப்பினருக்கு விருது வழங்கி கவுரவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications