சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"எளிமை.. எளிமை".. இதுதான் ஸ்டாலின்.. இக்கட்டான நேரத்தில் சரியான முடிவெடுத்த திமுக.. இதை பாருங்க!

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் இன்று தமிழக முதல்வராக பதவி ஏற்கும் விழா மிக எளிமையாக, பெரிய ஆரவாரம் இன்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக இக்கட்டான நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பை உணர்ந்து பெரிய விழாவை தவிர்த்துள்ளார்.

Recommended Video

    நீண்ட காத்திருப்பு.. பல்வேறு சவால்கள்.. இறுதியில் சாதித்து காட்டிய Stalin

    தமிழகத்தின் புதிய முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். தமிழக சட்டசபை தேர்தலில் 159 இடங்களில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்கிறது.

     விடாமல் அடிக்கும் கொரோனா.. உலகளவில் அதிகரிக்கும் எண்ணிக்கை - பல நாடுகள் கவலை விடாமல் அடிக்கும் கொரோனா.. உலகளவில் அதிகரிக்கும் எண்ணிக்கை - பல நாடுகள் கவலை

    இந்த நிலையில் நேற்று திமுக சார்பாக தமிழக அமைச்சரவை அறிவிப்பும் வெளியிடப்பட்டது. மொத்தம் 33 அமைச்சர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

    எப்படி

    எப்படி

    இன்று திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். இதில் திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி தலைவர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், ஸ்டாலினின் குடும்பத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆகியோர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

    ஏற்பாடு

    ஏற்பாடு

    பெரிய அளவில் ஆடம்பரம் இல்லாமல், மிக சிறிய நிகழ்வாகவே பதவி ஏற்பு நிகழ்ச்சி நடக்கிறது. மேடையில் வெறும் 3 இருக்கைகள் வைத்து, பெரிய அளவில் கூட்டம் கூடாமல், சமூக இடைவெளியோடு, நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திமுக தொண்டர்களும் கூட ஆளுநர் மாளிகைக்கு வெளியேதான் சமூக இடைவெளியோடு கூடி இருந்தனர்.

    எளிமை

    எளிமை

    இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில், விழா மேடைக்கு அருகில் பெரிய அளவில் பதாகைகள் இல்லை, பெரிய பிளக்ஸ் பேனர் இல்லை, ஸ்டாலின் வர கூடிய வழி எங்கிலும் ஒரு திமுக கொடி கூட இல்லை, அதேபோல் சாலையில் எங்கும் பேனர் வைக்கப்படவில்லை. சாலை ஓரத்தில் கொடி வைப்பதை திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்த்து வந்தார். தற்போது அதை பின்பற்றி, தனது கட்சி நிர்வாகிகளும் யாரும் பேனர், கொடி வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இது கொரோனா காலம் என்பதால் முடிந்த அளவிற்கு மிக எளிமையாக ஆட்சி பொறுப்பை ஏற்கும் முடிவை ஸ்டாலின் எடுத்துள்ளார். இப்படிப்பட்ட நேரத்தில் கொண்டாட்டங்களை மேற்கொள்வது கண்டிப்பாக கெட்ட பெயரை ஏற்படுத்தும். திமுக 10 வருடங்களுக்கு பின் ஆட்சிக்கு வருகிறது. திமுக கண்டிப்பாக இதை பெரிய நிகழ்வாக கொண்டாட வேண்டும் என்று நினைத்திருக்கும்.

    இல்லை

    இல்லை

    10 வருடத்திற்கு பின் கொடுக்கும் கம்பேக்கை பிரம்மாண்டமாக நடத்தலாம் என்று திமுக நினைத்து இருக்கும். ஆனால் அதை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு, கொரோனா காலம் என்பதால் எளிமையாக பதவி ஏற்க திமுக முடிவு செய்துள்ளது. ஸ்டாலினின் இந்த முடிவே அவரின் ஆட்சி எப்படி இருக்க போகிறது என்பதற்கான சின்ன டீசர் போல அமைந்துள்ளது.

    English summary
    Tamilnadu: CM M K Stalin swearing planned very simple as Covid 19 cases are surging.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X