சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

741 தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம்.. பாராட்டி தள்ளிய ஸ்டாலின்.. நெகிழ்ந்துபோன நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்றைய நவீன உலகில் மனிதர்களுக்கு திறமைகளுக்கு பஞ்சமில்லை. ஒவ்வொரு மனிதரும் ஏதாவது திறமையை தனது வசம் வைத்துள்ளனர். இதில் சிலர் தங்களது திறமையை சமூகத்தில் வெளிக்காட்டி அதில் சாதனையும் படைத்து வருகின்றனர்.

5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்5 பைசாவுக்கு பிரியாணி.. மதுரை ஹோட்டலின் கவர்ச்சிகர விளம்பரம்.. முண்டியடித்த மக்கள்.. விரட்டிய போலீஸ்

இப்படி ஒரு அரிய சாதனையை படைத்த ஒருவரை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினே மனமுகுந்து பாராட்டி தள்ளியுள்ளார். முதல்வரின் பாராட்டை பெற்ற நபர் யார்? அப்படி என்ன சாதனை படைத்தார்? என்பது பற்றி பார்ப்போம்.

ஓவியர் செய்த சாதனை

ஓவியர் செய்த சாதனை

நமது தாய்மொழியான தமிழின் அடையாளமே அய்யன் திருவள்ளூவர்தான். திருக்குறள் என்னும் அரிய பொக்கிஷம் மூலம் மனித வாழ்வு முழுவதும் இந்த காலத்துக்கு மட்டுமின்றி எக்காலத்துக்கும் உதவும் வகையில் எடுத்து கூறி இருப்பார் திருவள்ளூவர். இப்படிப்பட்ட திருவள்ளூவரை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்துள்ளார் கணேஷ் என்னும் ஓவியர்.

தமிழ் எழுத்துக்களில் திருவள்ளூவர் ஓவியம்

தமிழ் எழுத்துக்களில் திருவள்ளூவர் ஓவியம்

அதாவது கணேஷ் 741 தமிழ் எழுத்துக்களை கொண்டு திருவள்ளூவர் ஓவியத்தை வரைந்துள்ளார். தமிழி எழுத்து, தமிழ் வட்டெழுத்து, தமிழ் எழுத்து. கிபி மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இன்றைய தமிழ் எழுத்துக்கள் வரை உள்ள தமிழ் எழுத்துக்கள் மூலம் இந்த ஓவியத்தை கணேஷ் படைத்துள்ளார். தான் வரைந்த ஓவியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார் கணேஷ்.

பாராட்டிய முதல்வர்

பாராட்டிய முதல்வர்

இந்த ஓவியத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓவியர் கணேஷை பாராட்டி தள்ளி விட்டார். "அன்பின் வழியது உயிர்நிலை" என்ற அய்யன் வள்ளுவரை, தமிழ் மீது கொண்ட அன்பால் தமிழ் எழுத்துகளால் ஓவியக் காவியமாக்கிய கணேஷை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்!'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை வெகுவாக பாராட்டினார்.

நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்

நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெகுவாக பாராட்டியது குறித்து ஓவியர் கணேஷ் நெகிழ்ந்து போயினார். இதேபோல் ஓவியருக்கு பாராட்டு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாட்டுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் மிக தரமான ஓவியத்தை படைத்த ஓவியர் கணேஷுக்கும் நெட்டிசன்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

English summary
Chief Minister MK Stalin lauded the painter who painted Thiruvalluvar's painting with 741 Tamil characters. Netizens have been showering praises on painter Ganesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X