சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்வதேச "எக்ஸ்பர்ட்கள்".. பறக்கும் ஆலோசனைகள்.. கொரோனாவிற்கு எதிராக ஸ்டாலினின் அஸ்திரம்.. சூப்பர்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த சர்வதேச எக்ஸ்பர்ட்களின் ஆலோசனைகளை தமிழக அரசு பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. இதற்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு முக்கிய மீட்டிங்குகளை நடத்தியதாக கூறப்படுகிறது.

Recommended Video

    வெளிநாட்டில் இருந்து Vaccine இறக்குமதி.. மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்ட முடியும்

    தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை இப்போதுதான் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. கேரளா, கர்நாடகா அளவிற்கு இல்லை என்றாலும், தமிழகத்திலும் தினமும் 28 ஆயிரத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகிறது.

    தமிழகத்தில் நேற்று 29272 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நேற்று 19182 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழகத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 162181 ஆக உயர்ந்துள்ளது.

    எப்படி

    எப்படி

    இந்தியாவில் கொரோனா வேகமாக அதிகரிக்கும் 16 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் இதற்காக சிறப்பான திட்டங்களை வகுத்து வருகிறார். தமிழக அரசு இந்த முறை வெளியிட்ட லாக்டவுன் அறிவிப்பே இதற்கு சிறந்த உதாரணமாகும்.

    லாக்டவுன்

    லாக்டவுன்

    திங்கள் கிழமை லாக்டவுன் என்று அறிவித்துவிட்டு, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக லாக்டவுன் இன்றி மக்களை பொருட்கள் வாங்க, பயணம் மேற்கொள்ள அனுமதித்தது உட்பட எல்லாமும் திட்டமிட்டு செய்யப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கம் வேக்சின் வழங்குவதிலும் தமிழக அரசு வேகம் காட்டி வருகிறது. மத்திய அரசு வேக்சின் வழங்குவதில் சரியாக ஒத்துழைக்கவில்லை.

    கோவாக்சின்

    கோவாக்சின்

    கோவாக்சின், கோவிட்ஷீல்ட் தொடங்கி எதுவும் இந்தியாவில் பெரிய அளவில் கையிருப்பில் இல்லை. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்த அடிப்படையில் வேக்சின்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டென்டர்களை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இப்படி வரிசையாக தமிழக அரசு கொரோனாவிற்கு எதிராக திட்டமிட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு வல்லுனர்களிடம் இதற்காக ஆலோசனைகளை பெற்று வருவதாக தகவல்கள் வருகின்றன. உள்நாட்டு வல்லுனர்களிடம் மட்டுமின்றி, வெளிநாட்டு வல்லுனர்களிடமும் ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார். முக்கியமாக கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நாடுகளின் வல்லுனர்களுடன் ஸ்டாலின் பேசி வருவதாக கூறப்படுகிறது.

    கொரோனா எப்படி

    கொரோனா எப்படி

    கொரோனாவை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி லாக்டவுன் திட்டங்கள், வேக்சின் விநியோகம், சிகிச்சை முறை, பொருளாதார ரீதியாக மக்களுக்கு உதவுவது என்று எல்லா விஷயங்களிலும் ஸ்டாலின் வல்லுனர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார் என்று தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்பு

    முன்பு

    இப்போது வேக்சின் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனைகளை செய்து வருகிறார். இதற்கு முந்தைய ஆட்சியில் இப்படி எல்லாம் நடந்ததே இல்லை, பெரிய ஆலோசனை எதுவும் நடந்தது இல்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் எந்த முடிவையும் கண்மூடித்தனமாக எடுக்கவில்லை.

    சிறப்பு

    சிறப்பு

    ஒவ்வொரு முடிவிற்கு பின்பும் முறையான ஆலோசனைகள் நடந்து இருக்கின்றன. முக்கியமாக தமிழகத்திற்கு ஏற்ற திட்டங்களை ஸ்டாலின் வல்லுனர்களிடம் விவாதித்து எடுத்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிகின்றன. இதனால் விரைவில் தமிழகத்தின் கொரோனா கிராப் வரும் நாட்களில் வேகமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Tamilnadu: CM Stalin holds meetings with many internationals experts to curb Covid 19 cases in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X