23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர் 167 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

தமிழ்நாட்டில் கொரோனா 2ஆம் அலையின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவலின் வேகம் ஒரு வாரத்தில் 10% மேல் அதிகரித்துள்ளது.
வைரஸ் பரவல் படுவேகமாக அதிகரித்து வருவதால், தமிழகத்தில் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை அமலுக்கு வரும் நிலையில் வைரஸ் பரவல் மெல்லக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

23 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 23,310 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 21,228 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கூடுதலாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 24 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக 12,72,602 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா உயிரிழப்பு
மாநிலத்தில் கொரோனா உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 94 பேர், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 73 பேர் என மொத்தம் 167 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று இணை நோய்கள் இல்லா 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50 வயதுக்கு உட்பட்ட 42 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் ஒட்டுமொத்த உயிரிழ்பு 14,779 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் வயதானவர்களே உயிரிழப்பதாகச் சொல்லப்பட்ட வந்த நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள்
தமிழ்நாட்டில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்கிறது. தற்போது மாநிலம் முழுவதும் 1,28,311 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து 20,062 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை மாநிலத்தில் 11,29,512 பேர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு
தலைநகர் சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6291 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல சென்னையில் ஒரே நாளில் 58 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கோவையில் ஒரே நாளில் 2029 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 1755 பேருக்கும், திருவள்ளூரில் 1385 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications