சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஸ்டிரிக்ட்".. தமிழகத்தில் இன்று அமலுக்கு வந்த புது லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. எதற்கெல்லாம் தடை!?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று முழு புதிய கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலாகி உள்ளது.

Recommended Video

    கைமீறி போகும் கொரோனா பாதிப்பு.. மீண்டும் நாடு முழுவதும் லாக்டவுன் கொண்டுவர திட்டம்?

    இந்தியாவில் கொரோனா கேஸ்கள் மீண்டும் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. இந்தியாவில் தினசரி கேஸ்கள், கடந்த 4 நாட்களாக 4 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் தினசரி கேஸ்கள் 4.1 லட்சத்தை தாண்டி உள்ளது.

     'Y' பிரிவு பத்தாது.. 'Z+' செக்யூரிட்டி வேணும் - 'சீரம்' நிறுவனத்தின் ஆதர் பூனவல்லா மனு 'Y' பிரிவு பத்தாது.. 'Z+' செக்யூரிட்டி வேணும் - 'சீரம்' நிறுவனத்தின் ஆதர் பூனவல்லா மனு

    தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 23,310 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 12,72,602 பேர் தமிழகத்தில் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பலி

    பலி

    தமிழகத்தில் இதுவரை 14,779 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்த நிலையில் இரண்டாம் அலையின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே செல்லும் நேரத்தை குறைக்கும் வகையில் முதல்வராக பதவி ஏற்க போகும் திமுக தலைவர் ஸ்டாலினின் உத்தரவின் பெயரில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    தமிழகத்தில் உள்ள பின்வரும் கட்டுப்பாடுகளை மிக கவனமாக கடைபிடிக்க வேண்டும், இல்லையென்றால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு விவரங்கள் பின்வருமாறு..

    அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

    மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதியை வழங்கும் கடைகளும் பாதி நாள் மட்டுமே இயங்கும். காலை 6 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி.அதேபோல் 50 வாடிக்கையாளர்கள் மட்டுமே இங்கே ஒரே நேரத்தில் இருக்க முடியும்.

    இந்த அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்க தடை

    அதே சமயம் பெரிய வணிக வளாகத்தில் உள்ள கடைகள், அது காய்கறி கடைகளாக இருந்தாலும் கூட அனுமதி இல்லை. 3000 சதுர அடிக்கு மேல் இருக்கும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி இல்லை.

    ஊழியர்கள்

    ஊழியர்கள்

    அரசு பேருந்துகள், மெட்ரோ, ரயில்கள், தனியார் பஸ்கள், ஆட்டோ, டாக்சி என்று அணைத்து விதமான போக்குவரத்து சாதனங்களிலும் 50% பேருக்கு மட்டுமே அனுமதி. அதே சமயம் மருத்துவ தேவைகள் போன்ற அவசர தேவைகளுக்கு எப்போதும் போல நாள் முழுக்க ஆட்டோ, டாக்சி இயங்கும்.

    சென்னையில் லோக்கல் ரயில் இயக்கப்பட்டாலும், மக்கள் செல்ல முடியாது. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் மக்கள், அரசால் அனுமதிக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்போம் மட்டுமே பயணிக்க முடியும்.

    அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர வேண்டும்.. குரூப்-ஏ பிரிவில் உள்ள ஊழியர்கள் எல்லா நாளும் பணிக்கு வருவது அவசியம். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில், மாறி மாறி வேலைக்கு வர வேண்டும்.

    உற்பத்தி தொழிற்சாலைகள் எப்போது போல இயங்கும்.

    மீன் கடைகள்

    மீன் கடைகள்

    எப்போதும் போல சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகத்தில் மீன் கடைகள், இறைச்சி கடைகள் இயங்காது. மற்ற நாட்களில் காலை 6-12 வரை மட்டுமே இயக்கம்.

    டாஸ்மாக் நேரம் மாற்றப்பட்டுள்ளது. காலை 8-12 வரை மட்டுமே டாஸ்மாக் செயல்படும்.

    அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்காது.

    உணவகங்கள்

    உணவகங்கள்

    ஹோட்டல்கள், உணவகங்கள் இயங்கும், ஆனால் பார்சல் மட்டுமே. டீ கடைகள் மதியம் 12 வரை இயக்கும்.

    மெடிக்கல்கள், பால், பெட்ரோல், டீசல் எப்போதும் போல நாள் முழுக்க இயங்கும்.

    இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் யாருக்கும் அனுமதி இல்லை.

    English summary
    Tamilnadu goes for more restrictions from today as the number of Covid 19 cases rise for the past few days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X