குட் நியூஸ் - சென்னையில் இனி “நோ டிராபிக்”.. லைட் ஹவுஸ் டூ கிண்டி “ஈசி”! தமிழக அரசின் “மெகா” பிளான்
சென்னை: மெரினா கடற்கரை அருகே அமைந்துள்ளா கலங்கரை விளக்கம் தொடங்கி கிண்டி வரை பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து உயர்மட்ட மேம்பாலத்தை அமைப்பது தொடர்பான ஆய்வறிக்கையை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. குறிப்பாக பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்களை அமைக்கவும் திட்டமிட்டு உள்ளது.
அதன் ஒருபகுதியாக சென்னை கலங்கரை விளக்கம் தொடங்கி கிண்டி வரை பல்வேறு பகுதிகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து இருக்கிறது.

ஏ.வ.வேலு
இது தொடர்பாக சட்டப்பேரவையில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் விரிவான ஆய்வறிக்கையை தயாரிப்பதற்கான அறிவிப்பை அமைச்சர் ஏ.வ.வேலு வெளியிட்டார். இந்த நிலையில் இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, அதை தயாரிக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.

வழித்தடம்
மெரினா கலங்கரை விளக்கத்தில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை அல்லது பட்டினப்பாக்கம் லூப் சாலை வழியே அடையாறு பசுமை வழிச்சாலை, துர்காபாய் தேஷ்முக் சாலை, சர்தார் பட்டேல் சாலை, அடையாறு ஆற்றின் வழியே கிண்டி செல்லும் வகையில் இந்த உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்து இருக்கிறது.

முக்கிய சாலை
எனவே மேற்குறிப்பிட்ட வழித்தடத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைப்பதற்கு சாத்தியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஏராளமான அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள், பொழுதுபோக்கு தலங்கள் என மக்கள் அதிகம் வந்து செல்லும் பல பகுதிகள் இந்த வழித்தடத்தில் உள்ளன.

போக்குவரத்து நெரிசல்
இதன் காரணமாக இந்த வழித்தடத்தில் உள்ள அதேபோல் கலங்கரை விளக்கம் சிக்னல், மயிலாப்பூர் கச்சேரி சாலை, பட்டினப்பாக்கம் சிக்னல், அடையாறு கிரீன்வேஸ் சாலை சிக்னல், கஸ்தூரிபாய் நகர் சிக்னல், தரமணி மத்திய கைலாஷ் சிக்னல்களில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் இதன் மூலம் தவிர்க்கப்படும் என அரசு நம்புகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications