சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

28 வருடங்களுக்கு பின்.. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் இயங்கும்..விரைவில் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இந்த வருட இறுதிவரை அரசு அலுவலகங்கள் சனிக்கிழமையும் இயங்குமென்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுக்க கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் போடப்பட்டுள்ளது.இதனால் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மார்ச் மூன்றாம் வாரம் மூடப்பட்டது. மே மாதம் இரண்டாம் வாரம் வரை தமிழகத்தில் இதனால் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.

அதன்பின் மே மாதம் கடைசி வாரம் தமிழகத்தில் குறைந்த ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் தொடங்கப்பட்டது. 50% ஊழியர்கள் மட்டுமே இதில் அனுமதிக்கப்பட்டனர். சுழற்சி முறையில் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வந்தனர்.

புதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணைபுதிய கல்விக்கொள்கை 2020: அரசுக்கு பரிந்துரை வழங்க அபூர்வா ஐஏஎஸ் தலைமையில் குழு அமைப்பு - அரசாணை

4 நாட்கள் மட்டுமே நடந்தது

4 நாட்கள் மட்டுமே நடந்தது

வாரத்தில் 6 நாட்கள் அப்போது அலுவலகம் நடந்தது. ஊழியர்கள் இதற்காக சுழற்சி முறையில் 4 நாடுகள் அலுவலகம் வந்தனர். இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 1 முதல் தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. இ பாஸ் மாவட்டங்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்கள்

ஊழியர்கள்

அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முழு வீச்சில் பணிகளை தொடங்க வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது சனிக்கிழமை பணி நாள் தொடரும் என்று தகவல்கள் வருகிறது. 2020 டிசம்பர் மாதம் வரை ஊழியர்கள் அலுவலகத்திற்கு சனிக்கிழமையும் வர வேண்டும். வாரத்தில் 6 நாட்கள் அவர்கள் அலுவலகம் வர வேண்டும், என்று வாய்மொழி உத்தரவு சென்றுள்ளதாக தகவல்கள் வருகிறது.

நீக்கம் எப்படி

நீக்கம் எப்படி

அதே சமயம் தற்போது சுழற்சி முறை பணி நீக்கப்பட்டுள்ளது. எல்லா ஊழியர்களும், 6 நாட்களும் பணிக்கு வர வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் இப்படி அரசு ஊழியர்கள் 6 நாட்கள் வேலை பார்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட உள்ளது. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் சில அரசு ஊழியர்கள் இந்த முடிவிற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

ஏன் இப்படி

ஏன் இப்படி

இதற்கான காரணமும் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, நிறைய கோப்புகள் தேங்கி இருக்கிறது. 4 மாதமாக பணிகள் நடக்கவில்லை. நிறைய அரசு பணிகள் நடக்க வேண்டி உள்ளது. இதனால் பணிகளை முடிக்கும் வகையில் இனி சனிக்கிழமையும் வர வேண்டும். விரைவில் ஊழியர்கள் தேங்கி இருக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu government extends the working day for Govt Workers for 6 days in a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X