சொத்து பத்திரங்கள்.. வீடு, மனை விற்பனையில் அதிரடி.. புதிய டார்கெட்டை நோக்கி தமிழக அரசு அதிரடி.. செம
சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், வீட்டு வசதி வாரியத்தின் சார்பிலும் அதிரடிகள் ஆரம்பமாகி உள்ளன. அந்தவகையில், தற்போது இதுகுறித்த தகவல் ஒன்று கசிந்து வருகிறது.
வாரியம் சார்பில் குடியிருப்பு மற்றும் வணிக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த வீடுகள், மனைகள் வாங்க மக்கள் மத்தியில் கடுமையான போட்டி உள்ளது. எனினும். வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் விற்பனை நடவடிக்கைகளில் உரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

இலக்குகள்: அதனால்தான்,. தமிழகம் முழுதும், 11,000க்கும் மேற்பட்ட வீடுகள், மனைகள், வணிக மனைகள் விற்பனைக்கு காத்திருக்கின்றன. விற்பனையில் தொய்வு ஏற்படுவதால், வாரியத்தின் வருவாய் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.
குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களின் வாடகை குடியிருப்பு மனைகள் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகள் விற்பனை ஆகியவற்றின் வாயிலாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கான வருவாய் ஈட்டப்படுகிறது.
அந்த வகையில் 2024-25 ஆம் நிதியாண்டில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் விற்பனை மற்றும் சேவைகளுக்கான தனிப்பட்ட மென்பொருள் உருவாக்குதல், வணிக திட்டங்களை வாடகை மற்றும் குத்தகைக்கு விடுவதற்கு மின் ஒப்பந்தப்புள்ளி செயல்முறையை செயல்படுத்துதல், வருவாய் வசூலுக்கான சேகரிப்புக்கான சிறப்பு குழுக்களை குறிப்பிட்ட இலக்குகளுடன் உருவாக்குதல் , குடியேறுவதற்கு தயாராக உள்ளது.
வீட்டு வசதி வாரியம்: மனைகள் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளின் விவரங்களை புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தில் பதிவேற்றுவதன் மூலம் 2024-25 ஆம் நிதியாண்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வருவாய் வசூல் 1650 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜுன் மாதம் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இதே தகவல் மீண்டும் இணையத்தில் வட்டமடித்து வருகிறது.. கடந்த, 2022 - 23ம் நிதியாண்டில், 1,362.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2023 - 24ல், 814.49 கோடி ரூபாயாக வருவாய் குறைந்துவிட்டதாம். எனவே, நடப்பு நிதியாண்டில், 1,650 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதாம்.
வருவாய் நிர்ணயம்: இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "வீட்டு வசதி வாரியத்தில், கடந்த நிதியாண்டில் குடியிருப்புகள், வணிக மனைகள் விற்பனை, வாடகை வாயிலான வருவாய் குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த நிதியாண்டில் 1,650 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.. இதற்காக, தயார் நிலையில் உள்ள வீடுகள், மனைகள், வணிக மனைகளை விற்பதற்கான பணிகள் துரிதமாகி வருகின்றன.
குடியேறுவதற்கு தயாராக உள்ள வீடுகள், மனைகள் குறித்த விபரங்களை சோஷியல் மீடியாவில் வெளிப்படுத்தி, விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications