சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாட்டை விட கர்நாடகா “பெட்டர்”.. மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் தொகுதிக்கே பெருமை - அண்ணாமலை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில்தான் சாதிய பாகுபாடு அதிகம் உள்ளது எனவும் இந்தியாவிலேயே சாதிய கொலை கர்நாடகாவை விட தமிழகத்தில் தான் அதிகமாக நடைபெறுகிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறது.

காரைக்குடி செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை விமானத்திற்கு வருகை தந்த பாஜக தலைவர் அண்ணாமலை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாளை மாலை சிவகங்கை பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக மதுரை புறப்பட்ட அண்ணாமலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

தப்புமா பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு.. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எம்எல்ஏக்களை வளைக்க பாஜக வலை தப்புமா பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு.. நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. எம்எல்ஏக்களை வளைக்க பாஜக வலை

பாஜக கொள்கை

பாஜக கொள்கை

அப்போது பேசிய அவர், "சாதியை அடிப்படையாக வைத்து இந்து மதம் இருந்தது கிடையாது. மத அரசியல் செய்வது திமுக தான். பாஜகவினர் அல்ல. பாஜக என்றுமே அதை செய்வது கிடையாது. ஜாதியை வைத்து அரசியல் செய்த காலம் மலையேறிவிட்டது. அனைத்து சமுதாயத்தினரையும் மேலே கொண்டு வர செய்வதுதான் அரசியல். ஒடுக்கப்பட்ட நபர்களை மேலே கொண்டு வர வேண்டும் என்றால் அவர்கள் கையில் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவினர் கொள்கை.

 திராவிட வாசனை

திராவிட வாசனை

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு திராவிட வாசனை உபியில் அடிக்கிறது என்றெல்லாம் செய்தி வந்தது. இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என கூறியவர்கள் இதற்காக டெல்லி முதல்வரை அழைத்து வர வேண்டும். தமிழகத்தின் பள்ளி மாணவர்கள் போதையின் கையில் உள்ளனர். பஞ்சாயத்து தலைவரின் கணவர் பள்ளி தலைமை ஆசிரியரை நேரில் சென்று அடிக்கிறார். இது போன்ற செயல்கள் தமிழகத்தில் இதுவரை யாரும் பார்த்ததில்லை.

பிரதமர் மோடி தொகுதி

பிரதமர் மோடி தொகுதி

பிரதமர் மோடி எங்கே நின்றாலும் அது மக்களுக்கு தான் பெருமை. மோடியின் பாராளுமன்ற தொகுதி எப்படி மாற்றம் அடைந்துள்ளது என்று பார்க்க வேண்டும். தமிழகத்தில் பிரதமர் மோடி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதிக்கு மிகப்பெரிய அங்கீகாரம். புதிதாக மாவட்ட தலைவர்கள் நியமனம் என்பது பொறுப்புக்கு தகுதியானவர்கள் யாராக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

 ராகுல் காந்தி யாத்திரை

ராகுல் காந்தி யாத்திரை

ராகுல் காந்தியின் யாத்திரை நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. செல்கின்ற இடமெல்லாம் பிரிவினைவாத சக்திகளை சந்திக்கிறார். கச்சத்தீவில் தாரை வார்த்த பிறகு தான் மீனவர்களுடைய பிரச்சனை ஆரம்பித்தது. பாரதிய ஜனதாவை பொருத்தவரை கச்சத்தீவு மீண்டும் இந்தியாவிற்கு தமிழகத்திற்கு வரவேண்டும். மற்ற எய்ம்ஸ் மருத்துவமனையை விட தனித்துவம் வாய்ந்தது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை. 25 ஆயிரம் பேர் பயன் அடையும் வகையில் அது அமைய உள்ளது.

சாதி கொலைகள்

சாதி கொலைகள்


சீமான் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவர் மாதம் மாதம் பல்வேறு கருத்துக்களை மாற்றி மாற்றி கூறியுள்ளது புரியாத புதிராக உள்ளது. குழந்தைகளுக்கு தேன் மிட்டாய் வாங்குவதில் கூட ஜாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. இந்த இடத்தில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது. தமிழகத்தில் தான் சாதிய பாகுபாடு அதிகம் உள்ளது. இந்தியாவிலேயே சாதிய கொலை கர்நாடகாவை விட அதிகமாக நடைபெறுவது தமிழகத்தில் தான்." என்றார்.

English summary
BJP state president Annamalai has said in Chennai airport press meet, "that there is more caste discrimination in Tamil Nadu and more caste killings are taking place in Tamil Nadu than in Karnataka."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X