அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் பின்னணி குறித்த பகீர் ட்வீட்..உண்மையா என கேட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!
சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கட்டி இருக்கும் ரஃபேல் வாட்ச் பின்னணி குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்திய ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ள தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையா என கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பல்வேறு செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் விளாசித் தள்ளி வருபவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. விமானத்தில் அவசர கதவை திறந்த விவகாரம், ரஃபேல் வாட்ச் விவகாரம் என பலவற்றையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தியவர் அமைச்சர் செந்தில் பாலாஜி.

இந்த நிலையில் Nation First என்ற பெயரிலான ஒரு ட்விட்டர் பதிவில் எழுதப்பட்ட அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் குறித்த பரபரப்பான பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
Nation First என்ற ட்விட்டர் பக்கத்தில் எழுதப்பட்டிருப்பதாவது: பாஜக தலைவரோ இல்ல வேற யாரோ 5 , 10 லட்சத்துக்கோ அதுக்கு மேலயோ வாட்ச் வாங்குவதில் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. ஆனா ரெண்டு ஆடு வச்சிருக்க ஏழை விவசாயி என்று வேஷம் போட்டு 4 லட்சம் ரூவாய்க்கு வாட்ச் வாங்கி அதுக்கு கணக்கு காட்ட முடியாம கதை சொல்லிகிட்டு இருப்பது தான் வெட்ககேடு. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அண்ணாமலை தேசப்பற்றுடன் (!?) கட்டியிருக்கும் ரபேல் வாட்ச் அவரோட சொந்த பணத்தில் வாங்கிய வாட்சே இல்லை. அது போலீஸில் வேலை பார்த்த காலத்தில் லஞ்சமாக பெற்றுக்கொண்ட திருட்டு வாட்ச்.
உண்மையா? https://t.co/bLygMJq3lC
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) April 13, 2023
அந்த வாட்ச் உண்மையிலேயே SARVALOKA SERVICES-ON-CALL PRIVATE LIMITED அப்படின்ற பெங்களூர் நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது! இந்த நிறுவனம் 2014ல் துவங்கப்பட்ட வீட்டு கட்டுமானம் மற்றும் ரிப்பேர் பணிகள் செய்யும் ஆன்லைன் நிறுவனம். இந்த நிறுவனம் பின்னாளில் விரிவாக்கம் மற்றும் நிர்வாக மாறுதல்கள் செய்யப்பட்டு HOUSEJOY என்ற பெயரில் செயல்பட ஆரம்பித்தது. ரூ.136 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டக்கூடிய இந்த நிறுவனத்தின் COOவாக அப்போது நியமிக்கப்பட்டவர் தான் 420 ஆசாமியான சஞ்சித் கவுரவ் (Sanchit Gaurav). இந்த சஞ்சித் கவுரவின் உள்ளடி வேலைகளால் இந்த நிறுவனத்தை துவக்கிய அர்ஜுன் குமார் மற்றும் சுனில் கோயல் ஆகியோர் அந்த நிறுவனத்தை விட்டே நிர்வாக குழுவால் வெளியேற்றப்பட்டனர் என்பது உள்ளிருந்து வரும் செய்தி!.
உள்ளடி அரசியல், நிறுவனத்தின் தரமற்ற சர்வீஸ்களால் கடுப்பானவர்கள் நிறுவனத்தின் மீது புகாரளித்து வந்தனர். இந்தச் சூழலில் தான் COO சஞ்சித் கவுரவ் பொருளாதார குற்றவாளியாக பெங்களூர் நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்பட்டு 3 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அப்போதைய கர்நாடக (அ)சிங்கம், அண்ணாமலை அக்டோபர் 2018 பெங்களூர் தெற்கு DCP- ஆக நியமிக்கப்பட்டார். இதே காலகட்டத்தில் HOUSEJOY நிறுவனத்தின் பெயரில் பல மோசடி புகார்கள் வரத்தொடங்கின. பாதிக்கப்பட்டவர்கள் அந்த நிறுவனத்தின் முன் போராட்டங்களும் நடத்தினர்.
DCP அண்ணாமலையின் காவல் எல்லைக்குள் தான் இது எல்லாமே நடக்குது. மீடியாக்களில் வெளியாகும் செய்திகளையும், பாதிக்கப்பட்டவர்கள் தரும் புகார்களையும் மழுங்கடிக்க நம்ம கிரிமினல் CEO அப்போதைய கர்நாடக ABVP பொறுப்பாளர், தற்போதைய அதே பெங்களூர் MPயான 'தேஜஸ்வி சூர்யா'வை அணுகுகிறார். இவ்வாறு நெருங்கிய நண்பர்களான தேஜஸ்வியும் சஞ்சித்தும் சஞ்சித்தின் HOUSEJOY நிறுவனத்திற்கு எதிராக கொடுக்கப்படும் புகார்களை கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகவே தேஜஸ்வி சூர்யா மூலம் அப்போதைய DCP அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட வாட்ச் தான் இந்த 'ரபேல் வாட்ச் BR03-94'! இதுல இன்னொரு விசயம் என்னன்னா தேஜஸ்வி சூர்யாவும் இதே வாட்சை கட்டிக் கொண்டிருந்தவர் தான்! மோசடி பேர்வழியிடம் லஞ்சமாக பெற்ற வாட்ச்சை கையில் கட்டிக்கொண்டுதான் அண்ணாமலை எல்லோருக்கும் தேசபக்தி பாடம் எடுக்கிறார். இவ்வாறு Nation First ட்விட்டர் பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதனைப் பகிர்ந்துதான் அமைச்சர் செந்தில் பாலாஜி உண்மையா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
குறிப்பு: Nation First எழுதியுள்ள ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படாதவை. அப்பதிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பிய காரணத்தால் நாம் அதை செய்தியில் வெளியிட்டுள்ளோம்.
-
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
மாசம் ரூ.4000 கன்பார்ம்! சிங்கப்பெண் வந்தாச்சு.. விஜய் கையில் எடுக்கும் அடுத்த முக்கிய திட்டம்! -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications