தொடர்ந்து உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை.. 3வது நாளாக இன்றும் விலையில் மாற்றமில்லை
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையிலேயே இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 10 மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 70 ரூபாய்க்கு விற்று வந்த பெட்ரோல் விலை சரசரவென உயர்ந்து தற்போது 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினமும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றபடி பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இதில் மத்திய அரசின் வரி காரணமாகவும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஆசியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகம் விற்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்றாவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. சென்னையில் நேற்றைய விலையிலேயே பெட்ரோல், டீசல் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பெட்ரோல் ரூ.102.49க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 105.25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 95.28 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மும்பையில் பெட்ரோல் விலை 107.83 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 97.45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டெல்லியில் பெட்ரோல் விலை 101.84 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 89.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஹைதராபாத்தில் பெட்ரோல் விலை 102.62 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை 96.81 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அரியலூர், கோவை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், விழுப்புரம்,விருதுநகர், மயிலாடுதுறை, தர்மபுரி, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், திண்டுக்கல், , நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை 102 -103 ரூபாய் என்ற விலையில் விற்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications