ஆபாசமாக பேசி கோடி, கோடியாக சம்பாதித்த.. பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கம்!
சென்னை: ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
Recommended Video
பப்ஜி ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த பப்ஜி விளையாட்டை மிகுந்த ஆபாசமான வர்ணனையுடன் யு டியூபில் நேரலை செய்துவந்ததாக யுடியூபர் பப்ஜி மதன் மீது 150-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.
சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதுடன் மட்டுமில்லாமல் தன்னுடைய விளையாட்டை நேரலையாகப் பார்ப்பவர்களிடம் இருந்து பெரும் அளவில் பணம் வாங்கி கோடி, கோடியாக பணம் சம்பாதித்துள்ளார் யுடியூபர் மதன்.

பப்ஜி மதனின் சித்து விளையாட்டு
சென்னையில் பங்களா, 2 சொகுசு கார்கள் , மனைவி கிருத்திகா வங்கி கணக்கில் ரூ.4 கோடி பணம் என்று பப்ஜி மதனும், அவரது மனைவி கிருத்திகாவும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். ஆபாச பேச்சுக்கள் பேசி மற்றவர்களிடம் பணம் கறப்பதற்காக உடைந்தையாக இருந்த பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்தனர்.

அதிரடி கைது
''தன்னை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது'' என்று தொடர்ந்து போலீசாரிடம் தொடர்ந்து தண்ணி காட்டி வந்த பப்ஜி மதனையும் தர்மபுரியில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து பப்ஜி மதனிடம் விடிய, விடிய விசாரணை போலீசார் விடிய, விடிய விசாரணை நடத்தினார்கள்.

பல கோடிகள் சம்பாதித்தனர்
பப்ஜி விளையாட்டு வாயிலாக சிறுவர்கள் மற்றும் பெண்களின் மனதில் விஷத்தை விதைத்த 'யு டியூபர்' மதன், போலீசாரிடம் ஆபாசமாக பேசி நடித்துக் காட்டினார். குறுகிய காலத்தில், கோடீஸ்வரர்களாக வேண்டும் என்று திட்டமிட்டு ஆபாசமாக பேசி தானும், தனது மனைவியும் பல கோடிகள் சம்பாதித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்தார் மதன்.

யூ-டியூப் சேனல்கள் முடக்கம்
தற்போது கணவனும்,மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் யூ டியூபர் மதனின் யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். முதலில் 8 லட்சம் சப்ஸ்கிரைபர் கொண்ட யூ-டியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது. பப்ஜி மதன் கேர்ள்; மதன் 18 பிளஸ் உள்ளிட்ட 2 சேனல்கள் முடக்கப்ட்டுள்ளதாகவும், மீதி உள்ள யூ-டியூப் சேனல்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு! ஒரே நாளில் தீர்வு.. சென்னைக்கு குஷி -
பெங்களூருக்கு வேட்டு! இந்தியாவிலேயே அதிக சம்பள உயர்வு கிடைக்கும் நகரம் எது தெரியுமா? -
இதுதான் மாற்றமா? சென்னை அரசு மருத்துவமனையில்.. இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்! மக்கள் ஷாக் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications