சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்ன செய்வீங்களோ.. எனக்கு தெரியாது.. 2026 இல் அன்புமணி தமிழக முதல்வராகணும்.. ராமதாஸ் கட்டளை

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என திண்டிவனத்தில் நடந்த பாமக தொகுதி நிர்வாகிகள் கூட்டத்தில் அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

திண்டிவனம், வானூர், செஞ்சி, மயிலம் ஆகிய தொகுதி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திண்டிவனத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார்.

தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவர் கடத்தி தாக்குதல்.. அமைச்சர் அனிதாவின் ஆதரவாளர் கைது தூத்துக்குடியில் பயிற்சி பல் மருத்துவர் கடத்தி தாக்குதல்.. அமைச்சர் அனிதாவின் ஆதரவாளர் கைது

அவர் பேசுகையில் தேர்தலில் தனியாக நிற்க வேண்டாம். நம்மிடம் சக்தி இல்லை. சக்தியை இழந்து கிடக்கிறோம். ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என நீங்கள் வற்புறுத்தினீர்கள்.

கட்சிகளுடன் கூட்டணி

கட்சிகளுடன் கூட்டணி

இதனால் மாறி மாறி கட்சிகளுடன் கூட்டணி வைத்து 20 எம்எல்ஏக்கள், 25 எம்எல்ஏக்கள், 18 எம்எல்ஏக்கள், 6 எம்பிக்கள், 10 ஆண்டுகாலம் 2 மத்திய அமைச்சர்கள் என பாமகவின் செல்வாக்கு உயர்ந்தது. அப்போது தனியாக நிற்க வேண்டாம் என நாங்கள் சொன்னது சரிதான் என நீங்கள் சொன்னீர்கள். தற்போது நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றுள்ளோம்.

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும்

திமுகவுக்கும் காங்கிரஸுக்கும்

உள்ளூர் புரிதலுக்கு விட்டுக் கொடுப்பது என திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் வேலை செய்து நம்முடைய கட்சிக்காரர்களே பாமகவுக்கு குழி பறித்தனர். இதனால் 2 தொகுதிகளை இழந்தோம். அந்த தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்திருக்கும். அந்த வியாதி உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்தது. இது தொடராமல் தடுப்பதற்கு ஒரே வழி திண்ணை பிரச்சாரம். சமூக வலைதளம் ஆகியவற்றின் மூலம் பிரச்சாரம் செய்வதுதான்.

திண்ணை பிரச்சாரம்

திண்ணை பிரச்சாரம்

வரும் சட்டசபை தேர்தலில் பாமக ஆட்சி அமைக்க வேண்டும். அன்புமணிக்கு என்ன குறை உள்ளது, திறமையானவர். அவரது தலைமையில் பாமகவின் ஆட்சி அமைய வேண்டும். ஊர் ஊராகச் சென்று திண்ணை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

60 எம்எல்ஏக்கள்

60 எம்எல்ஏக்கள்

அவர்கள் கொடுக்கும் உணவை அருந்தி அவர்கள் வீட்டில் படுத்து உறங்கி 100க்கு 40 சதவீத வாக்குகளை பெற்று 60 எம்எல்ஏக்களை பெற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே. மணி, முன்னாள் எம்.பி. தன்ராஜ், பேராசிரியர் தீரன், மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

English summary
PMK Ramadoss says that Anbumani Ramadoss should be made as CM of TN in next election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X