சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா தென்சென்னைக்கு இந்த ஆண்டு விருந்துதான் போங்க.. அடுத்த மழை 7ஆம் தேதி இருக்கு.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: தென்சென்னைக்கு இந்த ஆண்டு விருந்துதான் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் தென் சென்னையில் கன மழை பெய்துள்ளது. எனவே இந்த ஆண்டு தென் சென்னைக்கு விருந்துதான்.

வழக்கம் போல் மத்திய சென்னை, வடசென்னை பகுதிகளில் வழக்கம்போல் கனமழையும் லேசான மழையும் மாறி மாறி பெய்துள்ளது. மழை தீவிரமடையும். ஆனால் அது குறைந்த நேரத்திற்கு மட்டும்தான். பின்னர் மழை நின்றுவிடும்.

 தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலை.. இந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம் தொடரும் காற்றழுத்த தாழ்வு நிலை.. இந்தெந்த பகுதிகளில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை மையம்

சென்சுரி

சென்சுரி

அடுத்த கிழக்கு திசை காற்று வரும் 7 -ஆம் தேதி ஏற்படுவது போல் தெரிகிறது. எதிர்பார்த்தபடி குன்னூரில் கனமழை பெய்துள்ளது. அங்கு மழையின் பதிவு மற்றொரு சென்சுரி அடித்துள்ளது.

புறநகர் பகுதிகள்

புறநகர் பகுதிகள்

ராமநாதபுரத்தில் நடப்பது கனவு போல் உள்ளது. அங்கும் மழை தொடரும் என தெரிவித்துள்ளார். சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழை நின்று விட்டதாக கருதியிருந்த நிலையில் இன்று தென் சென்னையின் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

சென்னையில் மீண்டும் மழை

சென்னையில் மீண்டும் மழை

ஏற்கெனவே வெள்ளக்காடாக காட்சியளித்த தென் சென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது. அது போல் செங்கல்பட்டிலும் நேற்று இரவு முதல் மழை நன்றாக பெய்தது.

சென்னை வானிலை மையம்

சென்னை வானிலை மையம்

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அப்படியே தொடர்வதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.

English summary
Tamilnadu Weatherman says that Next Easterly wave seen around 7th December. Southern chennai having feast this year while the central and north chennai are having mixture as usual.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X