சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெப்பச்சலனத்தால்.. தமிழகத்தில் இடி மழை காத்திருக்கு.. ஆனால் சென்னைக்கு வாய்ப்பில்லை.. வெதர்மேன்

Google Oneindia Tamil News

சென்னை: வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் இடி மழை பெய்யும். ஆனால் சென்னைக்கு வாய்ப்பில்லை என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Tamilnadu Rain Update : 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கோடை வெப்பம் தாளித்து எடுத்து வருகிறது. எனினும் தென் தமிழகத்தில் சில இடங்களில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழை பெய்து வருகிறது.

    ஆங்காங்கே வெப்பம் 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர். வீட்டில் இருக்கும் வயதானவர்களால் இந்த வெயிலை தாள முடியவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

    நற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு நற்செய்தி.. தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

    உள்மாவட்டங்கள்

    உள்மாவட்டங்கள்

    இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், தென்மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக உள்மாவட்டங்களில் வெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கேரளம் மற்றும் தமிழகத்தின் உள்மாவட்டங்கள், கர்நாடகத்தின் தென்பகுதியில் உள்ள உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

    மாவட்டங்கள்

    மாவட்டங்கள்

    தற்போதைய நிலவரப்படி இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. ஆனால் அது புயலாக மாற வாய்ப்பில்லை. இது நீண்ட காலம் நீடித்தால் புயல்களை அதிகரிக்க உதவும். வெப்பம் எப்போதும் ஒரு முக்கியமான நிகழ்வாகும். எத்தனை மாவட்டங்கள் வெயிலில் இருந்து விடுபட போகிறது என்பதை பார்ப்போம்.

    ஏரி பகுதிகள்

    ஏரி பகுதிகள்

    தமிழகத்தின் வட கடலோரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆனால் சென்னையில் மழை பெய்ய வாய்ப்பில்லை. முதலில் காற்றடிக்கும் பிறகு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இடி இடிக்கும் போது திறந்த வெளியிலோ, மொட்டை மாடிகளிலோ அல்லது ஏரி பகுதிகளிலோ யாரும் இருக்காதீர்கள்.

    மாவட்டம்

    மாவட்டம்

    உங்கள் வீட்டு விலங்குகளையும் அப்பகுதிகளில் கட்டி வைக்காதீர்கள். காற்று உள்ள பகுதியில் சரியாக பெங்களூர் பகுதி வருவதால் இன்று இங்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தை பொருத்தமட்டில் எந்த மாவட்டம் என பிரித்து சொல்வது கடினம் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். கடந்த இரு தினங்களாக பெங்களூரில் பேய்க் காற்றுடன் மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Tamilnadu Weatherman says Upper Air Circulation , It has to be the best days for Thunderstorms in Tamilnadu and South interior Karnataka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X