இனி மக்களே டிரான்ஸ்பார்மர்களை வாங்கலாம்.. தமிழ்நாடு இ.பி எடுத்த முக்கிய முடிவுகள்.. சூப்பர் வாய்ப்பு
சென்னை: தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) மின் நுகர்வோர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த முக்கிய நடவடிக்கை ஒன்றை அறிவித்துள்ளது. பெரிய குறைந்த மின்னழுத்த (LT) நுகர்வோர்கள், தாமாக முன்வந்து மின் விநியோக மின்மாற்றிகளை (distribution transformers) வாங்கிக்கொள்ளலாம். அதற்கான செலவை, வரும் மாதங்களில் அவர்களது மின் கட்டணத்தில் சரிசெய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்மாற்றிகள் வாங்குவதற்கான டெண்டர்கள் இறுதி செய்யப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், மின்மாற்றிகள் விநியோகத்தில் சிக்கல் நிலவுகிறது. இந்தச் சூழலில், TNPDCL தனது தலைமைப் பொறியாளர்களுக்கு இது குறித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது. அதில், பல்வேறு திறன்கொண்ட மின்மாற்றிகளை நுகர்வோர்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்படும் சமீபத்திய விலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் (TNPDCL) அறிவிப்பை
இந்த விலைப் பட்டியல், 16 KVA / 11 KV / 433V திறன் கொண்ட மின்மாற்றிக்கு ₹1.58 லட்சம் முதல், 200 KVA / 22 KV / 433V திறன் கொண்ட மின்மாற்றிக்கு ₹6.73 லட்சம் வரை ஒன்பது வெவ்வேறு திறன்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, 150 HP (112 kW) அல்லது அதற்கு மேற்பட்ட மின் தேவை கொண்ட, அல்லது 900 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட இடவசதி கொண்ட பெரிய LT நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். TNPDCL வட்டாரங்கள் வெளியிட்ட அறிவிப்பில், 50 HPக்கு மேல் தேவைப்படும் LT நுகர்வோர்கள் தாங்களே மின்மாற்றிகளை வாங்கி, பின்னர் கட்டணத்தில் சரிசெய்து கொள்ளலாம்," என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடைமுறை இப்போது அறிவிக்கப்பட்டு இருந்தாலும், நுகர்வோர்கள் தாமாகவே மின்மாற்றிகளை வாங்கும் பழக்கம் கடந்த சில மாதங்களாகவே இருந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த சில தொழிலதிபர்கள், மின்மாற்றி பற்றாக்குறையால் மின் இணைப்பு கிடைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து புகார் தெரிவித்துள்ளனர்.
மின் இணைப்பு கிடைப்பதில் ஏற்படும் தாமதம்
சிலர், ஆறு மாதங்களுக்கு முன்பு புதிய இணைப்புக்காக மின்சார வாரியத்திற்கு ₹1.56 லட்சம் செலுத்தியும், இதுவரை மின்மாற்றிகள் கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர். PVC பைப் தயாரிப்பு அலகிற்கான தொழில்துறை சேவைக்கு விண்ணப்பித்ததாகவும், பிப்ரவரியில் TNPDCL ஊழியர்களின் ஆலோசனைப்படி இயந்திரங்களை வாங்கியதாகவும் பலர் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தில் மின்மாற்றிகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
ஊழியர்கள் மின்மாற்றிகள் மற்றும் கடத்திகள் பற்றாக்குறையை தாமதத்திற்குக் காரணமாகக் கூறுகிறார்கள். மேலும், சில ஊழியர்கள் ரசீதுகள் எதுவும் கொடுக்காமல் ₹30,000 வரை வசூலித்ததாகவும் மக்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.
TNEB கூடுதல் வசதி
தமிழ்நாட்டில் மின்சார வாரியம் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் வீடு மாறினால் இணைப்புகளில் பெயரை மாற்றுவது, புதிய வீடு வாங்கினால் எளிதாக இணைப்புகளை பெறுவதற்கு என்று தமிழ்நாடு மின்சார வாரியம் எளிமையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
மின்சார வாரியத்தின் அணைத்து இணைய சேவைகளும் இப்போது புதிய இணையதள
முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது. http://app1.tangedco.org/nsconline/ என்ற
முகவரிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
முன்னதாக tangedco பழைய முகவரியில் கட்டணம் செலுத்துவது தொடங்கி பல சேவைகள் கடினமாக இருந்தன. அவை மெதுவாக இயங்கின. இப்போது அது மொத்தமாக மாற்றப்பட்டு புதிய சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இனி ஒரே இடத்தில் மக்கள் அனைத்து சேவைகளையும் மேற்கொள்ள முடியும். இந்த பக்கத்தில் சென்று இனி எளிதாக வீடு மாறினால் இணைப்புகளில் பெயரை மாற்றுவது, புதிய வீடு வாங்கினால் எளிதாக இணைப்புகளை பெற முடியும். இதற்காக நேரடியாக இனி அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லை.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications