சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை.. எந்தெந்த ஏரியாக்கள் தெரியுமா? மின்வாரியம் தந்த அப்டேட்
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணியின் காரணமாக சேலையூர், சிட்லபாக்கம், அம்பத்தூர், அனகாபுத்தூர், மணிலி சாத்தங்காடு உள்ளிட்ட பகுதியை சுற்றிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது.
சென்னையில் தடையின்றி மின்சாரம் விநியோகம் செய்ய அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சில இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் 22.08.2024 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
சேலையூர்: ஆண்டாள் நகர், பாக்கியலட்சுமி நகர், யஸ்வந்த் நகர், பத்மாவதி நகர், புவனேஸ்வரி நகர், மல்லேஸ்வரி நகர், ஜுல்வாயு வேகர், அம்பாள் நகர், ஜெய்வந்த புரம், திருமலை நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சிட்லபாக்கம்: வேளச்சேரி சாலையின் ஒரு பகுதி, சிட்லபாக்கம் மெயின் ரோடு, கணேஷ் நகர், திருமகள் நகர், சிலப்பதிகாரம் தெரு, மேத்தா நகர், ராஜேஸ்வரி நகர், 100 அடி சாலை, அன்னை இந்திரா நகர், கணபதி காலனி, அன்னை நகர், விஜயலட்சுமி நகர், தனலட்சுமி நகர் மற்றும் ஸ்ரீராம் நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் - அனகாபுத்தூர்: அம்பத்தூர் ஏரியாவை பொறுத்தவரை வெள்ளாளர் தெரு, குளக்கரை தெரு 1வது மற்றும் 2வது தெரு பிரிவு III உள்ளிட்ட இடங்களில் மின்தடை ஏற்படும். அதேபோல் அனகாபுத்தூர் பகுதியை எடுத்து கொண்டால் அன்னை தெரசா தெரு, காமராஜர்புரம், விநாயகா நகர், பாத்திமா நகர், இபி காலனி, தி.மலை ரோடு, பக்தவச்சலம் மெயின் ரோடு, அமரசன் நகர், ஜெயதீர்த்த ராவ் தெரு உள்ளிட்ட இடங்களில் ‛பவர்கட்' செய்யப்படும்.
மணலி சாத்தங்காடு: எம்ஜிஆர் நகர், விமலாபுரம், சீனிவாசன் தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பூங்காவனம் தெரு, காமராஜர் சாலை, படசாலை, சின்னசேக்காடு, பார்த்தசாரதி தெரு, பல்ஜிபாளையம், சத்தியமூர்த்தி நகர், டிகேபி நகர், விபி நகர், ராமசாமி நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மேலும் ஜெயலலிதா நகர், வெற்றி விநாயகர் நகர், தேவராஜன் தெரு, பெருமாள் கோவில் தெரு, பழைய எம்ஜிஆர் நகர், பெரியார் நகர், பாரதியார் தெரு, கிராமத்தெரு, எடப்பாளையம், ஒத்தவாடி தெரு, ஜெயபால் தெரு, பார்வதி நகர், தேவி கருமாரியம்மன் நகர், கணபதி நகர், மூலச்சத்திரம் மெயின் ரோடு, மணலி பகுதி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications