ரத்தன் டாடா காலமானதும்.. டாடா நிறுவன தலைவர் சந்திரசேகரன் வெளியிட்ட முக்கிய அறிக்கை! என்ன சொன்னார்?
சென்னை: இந்தியாவின் டாப் தொழிலதிபர்களின் ஒருவரான ரத்தன் டாடா இன்று காலமானார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டாடா மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரின் மரணம் தொடர்பாக டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அளவிட முடியாத பங்களிப்புகள், பணிகள் மூலம் டாடா குழுமத்தை மட்டுமல்ல, நமது தேசத்தின் கட்டமைப்பையும் வடிவமைத்த சிறந்த அசாதாரணமான தலைவரான ரதன் நேவல் டாடா நம்மை விட்டு பிரிந்தார். அவரின் இழப்பின் காரணமாக ஏற்பட்ட கனத்த உணர்வோடு அவரிடம் இருந்து விடைபெறுகிறோம்.

டாடா குழுமத்திற்கு, டாடா ஒரு தலைவராக இருந்தார். எனக்கு, அவர் ஒரு வழிகாட்டி, ஆலோசகர்.. அது மட்டுமல்ல அவர் என் நண்பர். அவர் எனக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தார். அவரின் சிறப்பான செயல்பாடு, ஒருமைப்பாடு மற்றும் புதுமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காரணமாக டாடா நிறுவனம் புதிய உச்சத்தை அடைந்தது.
டாடா குழுமம் அவரது அசாத்திய பணிகளின் கீழ் அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தியது. உலக அளவில் டாடா குழுமம் பரந்து விரிந்த அதே நேரத்தில் அந்த நிறுவனம் திசை மாறாமல்.. அதன் நோக்கத்திற்கு எப்போதும் உண்மையாக இருந்தது.
சமூகத்தின் வளர்ச்சிக்காக டாடாவின் அர்ப்பணிப்பு, அவர் மேற்கொண்ட தொண்டுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் மாற்றி உள்ளது. கல்வி முதல் சுகாதாரம் வரை, அவரது முன்முயற்சிகள், அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பலரின் வாழ்க்கையை மாற்றி உள்ளது. பலரின் வாழ்க்கையில் டாடாவின் அடையாளத்தை விட்டுச் சென்றுள்ளன. அவை வரவிருக்கும் தலைமுறைகளுக்கு பயனளிக்கும்.
அவர் தான் செய்த ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும், தன்னுடைய பணிவான பணப்பை வெளிப்படுத்தினார். முழு டாடா குடும்பத்தின் சார்பாக, அவருடைய அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மிகவும் ஆர்வத்துடன் ஊக்குவித்த கொள்கைகளை நிலைநிறுத்த நாங்கள் பாடுபடுவோம். அவரது மரபு தொடர்ந்து எங்களுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம், என்று டாடா குழும தலைவர் என் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
மரணம்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மரணம் அடைந்தார். சிகிச்சை பலனின்றி 9ம் தேதி இரவு 11.45க்கு அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவர் தனது உடல்நிலை சரியாக இருப்பதாக கூறி இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், எனது உடல்நிலை குறித்து சமீபத்தில் பரவி வரும் வதந்திகளை நான் அறிவேன், மேலும் இந்த கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன். எனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக நான் தற்போது மருத்துவ பரிசோதனை செய்து வருகிறேன். இதை பற்றி கவலைப்பட எந்த காரணமும் இல்லை. நான் நல்ல உடல் மற்றும் மனநிலையுடன் இருப்பதோடு, பொதுமக்களும் ஊடகங்களும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று கூறி இருந்தார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ரத்தன் டாடா உடல்நிலை சரியில்லாமல் மரணம் அடைந்தார். மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் வயோதிகம் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். நீண்ட நாட்களாக வயோதிகம் காரணமாக அவரின் உடலில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாகவே அவர் மரணம் அடைந்தார். மற்றபடி அவரின் மரணத்திற்கு வேறு முக்கியமான நோய் காரணங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. அவரின் மறைவிற்கு உலகம் முழுக்க பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications