ஆ.ராசா பேச பேச.. அப்படியே கப் - சிப் ஆன அவை! வாயடைத்த தேஜஸ்வி சூர்யா! சரியான நேரத்தில் வந்த ஜோதிமணி
சென்னை: தேஜஸ்வி சூர்யா இன்று லோக்சபாவில் பேசும்போது, தமிழக கட்சிகளையும் (குறிப்பாக திமுக) மற்றும் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுக எம்பி ஆ. ராசா கொடுத்த பதிலடி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
இந்திய அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 'தொகுதி மறுசீரமைப்பு சட்ட மசோதா' (Delimitation Bill), இன்று மக்களவையில் கடும் விவாதங்களுக்கு இடையே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்பையும் மீறி, பகுதிவாரி வாக்கெடுப்பின் மூலம் இந்த மசோதா அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு
மக்களவை இன்று காலை கூடியதும், தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசுத் தரப்பு முன்வந்தது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைபிடித்த மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்ற அச்சத்தை அவர்கள் முன்வைத்தனர்.
எதிர்க்கட்சிகளின் அமளியால் சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்து முடிவெடுக்க, சபாநாயகர் பகுதிவாரி வாக்கெடுப்பிற்கு (Division Vote) உத்தரவிட்டார்.
வாக்கெடுப்பு விவரம்: 207 ஆதரவு, 126 எதிர்ப்பு
நடத்தப்பட்ட பகுதிவாரி வாக்கெடுப்பில், மசோதா மீதான விவாதத்தைத் தொடங்க ஆதரவாகவும் எதிராகவும் வாக்குகள் பதிவாகின. அதன் விவரம் பின்வருமாறு:
ஆதரவு: 207 உறுப்பினர்கள்
எதிர்ப்பு: 126 உறுப்பினர்கள்
வாக்கெடுப்பின் முடிவில் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக லோக்சபாவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடுமையான விவாதம்
தேஜஸ்வி சூர்யா இன்று லோக்சபாவில் பேசும்போது, தமிழக கட்சிகளையும் (குறிப்பாக திமுக) மற்றும் எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
"பிரிவினைவாத மொழி": திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்ட தலைவர்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், "நான் உங்களைப் போலவே இந்தியாவின் தென் பகுதியைச் சேர்ந்தவன் தான். ஆனால் நீங்கள் பேசுவது போன்ற பிரிவினைவாத மொழியை (separatism) நான் பேசுவதில்லை. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்றுதான்," என்று சாடினார்.
"இரட்டை வேடம்": தமிழகத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக அரசியலமைப்பு சட்ட நகலை எரித்து "நாடகம்" ஆடுவதாக திமுகவை விமர்சித்தார். "உங்கள் பாசாங்குத்தனத்திற்கு ஒரு எல்லை இல்லையா?
தென்னிந்தியாவிற்கு "சிறந்த வாய்ப்பு": இந்த புதிய தொகுதி மறுவரையறை திட்டம் தென்னிந்திய மாநிலங்களுக்குக் கிடைத்துள்ள ஒரு சிறந்த வாய்ப்பு (Best Deal).
இதன் மூலம் தமிழகத்தின் இடங்கள் 39-லிருந்து 59-ஆக உயரும் என்றும், ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களின் இடங்கள் 66 அதிகரிக்கும் என்றும் கூறினார்.
பழைய மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையைத் தொடர்ந்தால், தமிழகம் உண்மையில் 8 இடங்களை இழந்திருக்கும், ஆனால் இப்போது இடங்கள் அதிகரிக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதிக வரி செலுத்தும் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்" என்ற எதிர்க்கட்சிகளின் வாதத்தை அவர் நிராகரித்தார். "அம்பானி ஒரு லட்சம் ரூபாய் வரி செலுத்துகிறார் என்பதற்காக அவருக்கு ஒரு லட்சம் வாக்குகளும், எனக்கு ஒரு வாக்கும் தர முடியுமா?" என்று கூறி, 'ஒரு நபர் - ஒரு வாக்கு' என்பதே ஜனநாயகம்.
பெண்கள் இடஒதுக்கீடு: தொகுதி மறுவரையறையை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைப்பதுதான் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த ஒரே வழி என்றும், எதிர்க்கட்சிகள் இதை முட்டுக்கட்டை போட்டுத் தாமதப்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஆ. ராசா பதிலடி
இதற்கு திமுக எம்பி ஆ. ராசா கொடுத்த பதிலடி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. 1971 பாகிஸ்தான் போரின் போதும், |1999 கார்கில் போரின் போதும், கோடிக் கணக்கில் நிதி அளித்த கட்சி திமுக. தேசியவாதம் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. மாநில சுய ஆட்சியை மதிக்காமலும், ஹிந்தி-சமஸ்கிருதத்தை எப்போதெல்லாம் திணிக்க முயற்சி செய்கிறீர்களோ, அப்போதெல்லாம் எங்களின் அடையாளத்தை பாதுகாக்க மட்டுமே குரல் கொடுக்கிறோம் என்று திமுக பிரிவினைவாதம் பேசுவதாக மக்களவையில் தவறான குற்றச்சாட்டை முன்வைத்த பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவுக்கு திமுக எம்.பி. ஆ.ராசா காட்டமான பதிலடி கொடுத்துள்ளார்.
இவர் பேசும்போது அவையில் இல்லாத ஜோதிமணி எம்பி.. இவர் பேச்சை கேட்க வேகமாக அமர்ந்தார். ஆ. ராசா பேச பேச அவை அப்படியே அமைதியாக அவர் பேச்சை கேட்டது கவனம் பெற்றது.












Click it and Unblock the Notifications