பிள்ளையின் கல்வி கட்டணத்தை கட்ட.. ஹவுஸ் ஓனர் முகத்தில் மிளகாய்ப் பொடி தூவி நகை திருட்டு.. பெண் கைது
சென்னை: பூந்தமல்லி அருகே மிளகாய் பொடி தூவி மூதாட்டியிடம் சங்கிலி பறித்த வழக்கில் அவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
போரூரை அடுத்த காரம்பாக்கம் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர் பொம்மி அம்மாள் (75). சம்பவத்தன்று இரவு வீட்டில் தனியாக இருந்த பொம்மியம்மாள் முகத்தில் மிளகாய் பொடியை மர்ம நபர் தூவினார். பின்னர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்து கொண்டு சென்று விட்டார்.
இதுகுறித்து வளசரவாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். சந்தேகத்தின் பேரில் அதே பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

ஒப்புக் கொண்டார்
இதுதொடர்பாக மூதாட்டியின் வீட்டில் குடியிருக்கும் தனலட்சுமியிடம் (40) விசாரித்தனர். அதில் மூதாட்டியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி நகையை பறித்ததை அவர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவரை கைது செய்தனர்.

தகவல்கள்
இதுகுறித்து போலீஸார் கூறுகையில் பொம்மியம்மாள் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் சரியான காட்சிகள் கிடைக்கவில்லை. அதனால் சம்பவம் நடந்த நேரத்தில் அந்த வழியாக சென்ற இருவரை பிடித்து விசாரித்தோம். அப்போதும் தகவல்கள் கிடைக்கவில்லை.

மிளகாய் பொடி
இதையடுத்து பொம்மியம்மாள் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் தனலட்சுமி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை விசாரித்தோம். முதலில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். பின்னர் உண்மையை ஒப்புக் கொண்டார்.

விசாரணை
கல்லூரியில் படித்து வரும் தனது பிள்ளைகளுக்கு கட்டணம் செலுத்தவே அவர் மீது மிளகாய் பொடி தூவி நகையை திருடியதாக தனலட்சுமி வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து கைதான தனலட்சுமியிடம் இருந்து நகையை மீட்ட போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications