காலி பண்ணா இவ்வளவு பணம் போகுமா? வாடகைதாரரை அசரடித்த பெங்களூர் ஹவுஸ் ஓனரின் வசூல் கணக்கு
சென்னை: பெங்களூருவில் வீடு வாங்குவது, வீட்டு வாடகை, உரிமையாளர்கள் போடும் கண்டிஷன்கள், நகரத்தில் ஏற்படும் செலவுகள் என பலவும் அடிக்கடி சமூகவலைத்தளத்தில் விவாதத்துக்கு உள்ளாகி விடுகிறது.. இதுபோன்ற சம்பவங்கள், வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையேயான நம்பிக்கையின்மை மற்றும் நியாயமற்ற கட்டண வசூல் குறித்த கேள்வியை உண்டுபண்ணி விடுகின்றன.. இதோ மற்றொரு வாடகைதாரர் தனது அனுபவத்தை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்..
சென்னையை போலவே பெங்களூரிலும் வாடகைக்கு வீடு வாங்கி தருவதாக சொல்லி, பலரிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்யப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது.. காரணம், பெங்களூரில் ஆயிரக்கணக்கானோர் வேலை, படிப்பு, மருத்துவ சிகிச்சை என பெங்களூரில் தங்கி இருக்கிறார்கள்.. இவர்களுக்கு வாடகைக்கு வீடு தேவைப்படுகிறது.

செக்யூரிட்டி டெபாசிட்
ஆனால், வாடகைக்கு வீடு வேண்டுமானால், 'செக்யூரிட்டி டெபாசிட்' செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்களாம்.. அப்படி செலுத்தப்படும் டெபாசிட் பணம் திரும்ப வழங்கப்படுவதும் இல்லையாம். அல்லது வீட்டிலுள்ள செலவுகளை காரணம் காட்டி அட்வான்ஸ் பணத்தை கழித்து விடுகிறார்களாம்.
எனவேதான், சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, இதுபோன்ற ஆன்லைன் புரோக்கர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார். ஆனாலும், பெங்களூருவில் மோசடிகள் நடந்தவண்ணம் உள்ளன. இதோ இந்த விசித்திர சம்பவத்தை பாருங்கள்
வாடகை வீட்டுதாரர்
பெங்களூருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த நபர் ஒருவர், வீட்டை காலி செய்துள்ளார்.. அப்போது வீட்டு உரிமையாளர் அட்வான்ஸ் பணத்திலிருந்து ஏகப்பட்ட பணத்தை பிடித்து கொண்டாராம்.. அதாவது பெயிண்ட் அடித்தல், கிளீன் செய்வது, போன்ற பணிகளுக்காக அட்வான்ஸ் தொகையிலிருந்து ரூ.51,000க்கு மேல் அதிரடியாக பிடித்தம் செய்துள்ளார்.
இதுகுறித்துதான் அந்த நபர் தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி உள்ளார்.. "வீட்டு உரிமையாளரிடம் சாவியை ஒப்படைப்பதற்கு முன்பே, கதவுகள் உட்பட மொத்த வீட்டையும் மறுபடியும் பெயிண்ட் பூச வேண்டும் என்று கண்டிஷன் போட்டார் ஹவுஸ் ஓனர்.. பெயிண்ட் பூசுபவரும் வந்து வீட்டை பார்த்தார்..
"வாடகைதாரர் இன்னும் குடியிருப்பில் உள்ளதால், வேலை அதிகமாக இருக்காது, மொத்த செலவு ரூ.20,000க்கும் குறைவாகவே இருக்கும்" என்று என்னிடம் தெரிவித்திருந்தார். பிறகு பெயிண்ட் பூசுபவரிடம் நேரடியாக வீட்டு உரிமையாளர் பேசினார்..
பெயிண்ட் அடிக்க செலவு
அதன் பிறகு, திடீரென பெயிண்ட் செலவு எதிர்பாராத விதமாக ரூ.36,000 ஆக உயர்ந்தது.. என்னிடம் கலந்தாலோசிக்காமல், என்னிடம் எதுவுமே சொல்லாமல் இந்த முடிவை ஹவுஸ் ஓனர் எடுத்துள்ளார்.. மேலும் மொத்த வேலையையும் துவங்கி, சொன்னபடியே 36000 ரூபாயையும் எடுத்து கொண்டனர்.. பெயிண்ட் பூசுவதோடு மட்டுமல்லாமல், டீப் கிளீனிங் செய்வதற்கு ரூ.10,000 பிடித்தம் செய்து கொண்டார்கள்..
பெங்களூருவில் 3BHK பிளாட்டுக்கு இப்படி சுத்தம் செய்ய பொதுவாக ரூ.4,500 முதல் ரூ.5,000 வரை மட்டுமே செலவாகும், இந்த ரூ.10,000 கட்டணமும் மிகவும் அதிகமாகத் தெரிகிறது. மேலும், ரூ.5,000 அட்வான்ஸ் பணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. வீட்டு உரிமையாளர் வட அமெரிக்காவில் வசிப்பதால், புதிய வாடகைதாரர் அங்கு குடியேறிய 2 வாரங்களுக்குப் பிறகு ஏதேனும் கூடுதல் சேதம் கண்டறியப்பட்டால் மட்டுமே இந்த தொகை திருப்பித் தரப்படும் என்று நிபந்தனையும் விதித்துவிட்டார்..
ஹவுஸ் ஓனர்
முன்னறிவிப்பின்றி எடுக்கப்பட்ட இத்தகைய முடிவுகளால் இந்த பிடித்தங்கள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்துவிட்டன.. அதிர்ச்சியடைய செய்துவிட்டன" என்று கண்ணீர் விடாத குறையாக பதிவிட்டுள்ளார்..
இதை பார்த்த இணையவாசிகள், தங்களது வாடகை வீட்டு அனுபவங்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.. பெங்களூரு, சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் வசிப்பவர்கள், ஒவ்வொரு மாதமும் கொடுக்கும் வாடகைக்கு சொந்த வீடு வாங்கி EMI கட்டிவிட்டு போயிடலாம் என்றே தோன்றுகிறது என்று நொந்து போய் பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications