ஓபிஎஸ் போஸ்டர் கிழிப்பு.. உச்சத்தை எட்டும் ஒற்றைத் தலைமை விவகாரம்.. ஆத்திரத்தில் ஆதரவாளர்கள்..!
சென்னை: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதுதொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது அதிமுகவில் நீண்ட நாட்களாக பேசப்பட்டு வந்த ஒற்றைத் தலைமை விவகாரம் விவாதிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை முற்றிலும் கைப்பற்ற எடப்பாடி பழனிசாமியும் ஓபிஎஸ்ஸும் முயற்சித்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

தனித்தனியே ஆலோசனை
இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் இபிஎஸ் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் உள்ள வீட்டில் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இதேபோல் சென்னையில் ஒபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் ஓபிஎஸ் சந்திக்க வந்தனர்.

இருவருக்கும் ஆதரவாக போஸ்டர்
இதனிடையே இபிஎஸ் பொதுச்செயலாளராக வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களால் பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டது. மறுபக்கம் தேனி, ராமநாதபுரம் மற்றும் சென்னை உள்ளிட்ட இடங்களில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் இருவரின் வீடுகளுக்கு முன் குவிந்தனர்.

போஸ்டர் கிழப்பு
இந்தநிலையில் ஓபிஎஸ்-க்கு ஆதரவாக ஓட்டப்பட்ட போஸ்டரில் ஓபிஎஸ் முகம் கிழிக்கப்பட்டது. இதற்கு இபிஎஸ் ஆதரவாளர்கள் தான் காரணம் என்று கூறி, ஒபிஎஸ் ஆதவரவாளர்கள் ஏராளமானோர், திடீரென பசுமை வெளிச்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இபிஎஸ்-க்கு எதிராக கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆதரவாளர்களிடையே உரசல்
இதனால் இபிஎஸ் - ஒபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் சிறு சிறு உரசல் ஏற்பட்டுள்ளது. ஆங்காங்கே இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்டவர்களோடு போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போக்குவர்த்து பாதிக்கப்படுவதாக கூறியதையடுத்து, ஒபிஎஸ் ஆதரவாளர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications