தாழம்பூர் நிலம் வாங்கறீங்களா? பவர் பத்திரத்தால் சொத்து செல்லாமல் போயிருமே? டாக்டர் ஹென்றி வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சொத்து வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவாக இருக்கும் நிலையில், அவசரப்பட்டு ஆவணங்களைச் சரியாகச் சரிபார்க்காமல் வாங்கும் நிலம் வாழ்நாள் முழுமைக்கும் பெரும் சட்டப் போராட்டத்திற்கே வழிவகுத்துவிடும்.. இதுகுறித்து ஒரு பிரபல சேனலுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளார்.. அதனை சுருக்கமாக இங்கே பார்ப்போம்..!!

டாக்டர் ஹென்றி அந்த பேட்டியில் பேசும்போது, "எழுதி கொடுப்பவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லும்.. எழுதி வாங்குபவர் உயிரோடு இருக்கும்வரை அது செல்லும்.. அல்லது எழுதி கொடுப்பவர் அதை ரத்து செய்யும்வரை அது செல்லும்..

Thalambur land property

பவர் பத்திரம் சொத்து

ஒருவேளை 5 பேர் எழுதித்தந்து, அதில் ஒருவர் இறந்தாலும், அந்த பவர் செல்லாது. வாங்குபவர் இறந்தாலும் அந்த பவர் செல்லாது.. அதையும் மீறி கிரயம் செய்தால், சொத்தின் வாரிசுதாரர்கள் இதுகுறித்து புகார் செய்யலாம். அப்படி செய்தால், யார் பவர் தந்தாரோ, அவரது வாரிசுகளுக்கு அந்த சொத்து வந்து சேர்ந்துவிடும்.

உங்கள் சொந்த நிலத்தை வேறொருவர் ஆக்கிரமித்து விட்டால், கோட்டாட்சியரிடம் புகார் தரலாம்.. ஆவணமும், உரிமையும் உங்களிடம் சரியாக இருந்தால், கோட்ட நீதிபதி முறையான உத்தரவை பிறப்பித்து, ஆக்கிரமிங்களை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார்.. காவல்துறை உதவியோடு ஆக்கிரமிடப்புகளை அகற்றி, உங்கள் சொத்தை நீங்கள் அனுபவிக்கலாம்.

குத்தகை நிலம் - பதிவு ஆவணம்

ஆனால், உங்கள் சொந்த நிலத்தில் வேறு யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க வேண்டுமானால், முதலில் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய வேண்டும்..

ஒருவேளை அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியாவிட்டால், நன்கு தெரிந்தவர்களுக்கு, நம்பிக்கையானவர்களுக்கு பதிவு ஆவணத்தில் குத்தகைக்கு விடலாம். வெறும் வாய்மொழி உத்தரவிட்டு குத்தகைக்கு விட முடியாது. காரணம், வாரிசு பிரச்சனை இருக்கலாம், அல்லது வாரிசுகளுக்கு அந்த இடத்தை ஏற்கனவே தந்திருக்கலாம். எனவே நிலத்தை பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே அதை வாங்க வேண்டும்,

மனை வைத்திருந்தாலும்சரி, அதனை சுற்றி வேலி அமைத்து சுற்றுச்சுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும.. ஆதரவற்ற நிலையில் அப்படியே விட்டுவிடக்கூடாது. இதுவே அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், ஒரு புல் வேறொருவர் இடத்தில் வளர்ந்திருந்தாலும், அது குறித்து புகார் தரப்பட்டுவிடும்.. அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டுவிடும். ஆனால் இங்கு காடு போல வளர்ந்திருந்தாலும், கண்டுக்கொள்வதே இல்லை. பராமரிப்பு இல்லாமலும் போட்டு விடுவார்கள்.

தாழம்பூர் நிலம் வாங்கறீங்களா?

அதேபோல தாழம்பூர் பகுதியில் நிலம் வாங்குவது குறித்தும் இனாம் நிலங்களின் சட்டப்பூர்வ சிக்கல்கள் குறித்தும் டாக்டர் ஹென்றி விரிவாக பேசியிருக்கிறார்.

"தாழம்பூர் கிராமத்து நிலங்கள் முன்பு "இனாம்" கிராம நிலங்களாக இருந்தவை... பிறகு இனாம் ஒழிப்பு சட்டத்தின் கீழ் அரசு அவற்றை கையகப்படுத்தி நிலமற்ற ஏழைகளுக்கு "அசைன்மென்ட் பட்டா" மூலமாக வழங்கியுள்ளது

அதனால் அந்த நிலங்களின் ஆவணங்களை முறையாகச் சரிபார்த்து சரியாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே வாங்க வேண்டும், ஒருவேளை அந்த நிலம் அனாதீனமாகவோ, அரசுக்குச் சொந்தமான நிலமாகவோ அல்லது "தீர்வை ஏற்பட்ட தரிசு" நிலமாகவோ இருந்தால் எந்த காரணத்தைக் கொண்டும் வாங்கக் கூடாது.

தமிழக பதிவுத்துறை

தமிழக மாவட்ட ஆட்சியர் வரலாற்றிலேயே ஒரு குறிப்பிட்ட நிறுவனம் மற்றும் நிலம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் செய்தியாக வெளியிட்ட வரலாறு இந்த தாழம்பூர் நிலங்களுக்கு உண்டு என்பதால், நிலம் வாங்கும் முன் கூடுதல் கவனம் தேவை.

அதனால் வருவாய்த்துறை மற்றும் பதிவுத்துறையின் பதிவேடுகளின் அடிப்படையில் நில உச்சவரம்புச் சட்டம், ஸ்டாண்டர்ட் ஏக்கர் சட்டம், யு.டி.ஆர் (UTR) பிரச்சனைகள், ஜமீன் சட்டம், ராயத்துவாரி, பட்டா நில ஒப்படைப்பு மற்றும் பஞ்சமி நிலங்கள் என எந்தவித சட்டச் சிக்கல்களும் இல்லை என்பதை முழுமையாக உறுதிப்படுத்திய பிறகே தாழம்பூரில் நிலம் வாங்க வேண்டும்" என்றெல்லாம் பொதுமக்களின் நன்மைக்காக அறிவுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+