ஒருமைப்பாட்டை முன்னிறுத்துவோம்! இந்து சமுதாய உறவுகளுக்கு தீபாவளி நல் வாழ்த்துகள்! -தமிமுன் அன்சாரி!
சென்னை: வெறுப்பு அரசியலை புறக்கணித்து, ஒருமைப்பாட்டை முன்னிறுத்துவோம் எனக் கூறி தீபாவளி வாழ்த்துக் கூறியுள்ளார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. அவர் விடுத்திருக்கும் வாழ்த்துச் செய்தி வருமாறு;
''இந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி திகழ்கிறது. இந்து சமுதாயப் பெருமக்கள் கொண்டாடி மகிழும் இத்திருநாள், அவர்களின் மகிழ்ச்சிக்குரிய அடையாளங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. பெரும்பான்மையினராக வாழும் போதும், சிறுபான்மையினரின் மீது அன்பு பகிர்ந்து வாழும் அவர்களின் உயரிய பண்பாட்டை பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.''

''அன்பு, ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றை மதித்திடும் இந்து சமுதாய உறவுகளுக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். வெறுப்பு அரசியலை புறக்கணித்து, ஒருமைப்பாட்டை முன்னிறுத்தும் மகத்தான பணிகளை எல்லோரும் இணைந்து முன்னெடுக்க இந்நாளில் உறுதியேற்போம்.''
இதேபோல் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள வாழ்த்து வருமாறு; ''தீமையின் மீது நன்மையும், இருளின் மீது ஒளியும் வெற்றி பெற்றதைக் குறிக்கும் வகையில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ராவணனை வென்று 14 வருட வனவாசத்திற்குப் பிறகு ஸ்ரீராமர் அயோத்திக்குத் திரும்பினார். அயோத்தியின் குடிமக்கள் தங்கள் வீடுகளையும் முழு நகரத்தையும் விளக்குகளால் அலங்கரித்தனர். இது தான் தீபாவளி என்ற கதை வட இந்தியாவில் உள்ளது.''
''அதேபோல், மோடி ஆட்சியில் 10 ஆண்டு காலம் மக்கள் பட்ட இன்னல்கள் முடிவுக்கு வர இருக்கிறது என்ற நம்பிக்கையோடு நாடே இருக்கும் நிலையில், இந்த தீபாவளி சிறப்பு வாய்ந்ததாகும். நாடு முழுவதும் இந்த நம்பிக்கை பரவிக்கிடப்பது மக்களின் எழுச்சியைப் பார்க்கும் போது தெரிகிறது. அடுத்த ஆண்டு மலரப்போகும் நல்லாட்சிக்கான கொண்டாட்டமாக இந்த தீபாவளி அமையட்டும்.''
''பாதுகாப்பான தீபாவளியைக் கொண்டாடுங்கள். வழக்கம்போல் மற்ற மதத்தவரோடு வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பகிர்ந்து கொள்வோம். வெறுப்புணர்வு வளர்த்தெடுக்கப்பட்டுள்ள சூழலில் இந்த தீபாவளி பண்டிகையை மத நல்லிணக்கத்தின் அடையாளமாகக் கொள்வோம்.''
இவ்வாறு தமிமுன் அன்சாரியும், கே.எஸ்.அழகிரியும் வாழ்த்து கூறியிருக்கிறார்கள்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications