பத்மசேஷாத்ரி பள்ளி- பாலியல் தொல்லை- ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க தமிழச்சி, தயாநிதி மாறன் கோரிக்கை
சென்னை: சென்னை பி.எஸ்.பி.பி.(PSBB) பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக லோக்சபா எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் மீது மாணவிகள் பலரும் சமூக வலைதளங்களில் பகிரங்க பாலியல் தொல்லை புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக புகார்கள் அளித்தும் கூட பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் மாணவிகள் குற்றச்சாட்டு.

கனிமொழி வலியுறுத்தல்
சமூக வலைதளங்களில் வெளியான இந்த குற்றச்சாட்டை முன்வைத்து திமுக எம்.பி. கனிமொழி ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டிருந்தார். அதில் புகார் கூறப்பட்ட ஆசிரியர் மீது, கண்டுகொள்ளாத பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

தமிழச்சி ட்வீட்
இதனைத் தொடர்ந்து மற்றொரு திமுக எம்.பி.யான தமிழச்சி தங்கபாண்டியன் தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னை கே.கே.நகர் பி.எஸ்.பி.பி. பள்ளியில் ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொல்லை தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. அந்த ஆசிரியர் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் அவரை பள்ளி நிர்வாகம் பாதுகாக்க முயற்சித்தால் மத்திய மாநில கல்வித்துறைகள் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி ஆசிரியர் மீதும் பள்ளி நிர்வாகத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தயாநிதி மாறன் கண்டனம்
மேலும் திமுகவின் லோக்சபா எம்.பி.யான தயாநிதி மாறனும் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தயாநிதி மாறன், சென்னை பத்ம ஷேசாத்ரி பள்ளி ஆசிரியர் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு பெற்றோராக வலியுறுத்துகிறேன் என்றார்.

ராமதாஸ் கோரிக்கை
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில், சென்னை பத்மசேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகள் பற்றி ஓர் ஆசிரியர் அருவருக்கத்தக்க வகையில் பேசி பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தவ்ஹீத் ஜமாஅத் ஷிப்லி
இதேபோல் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தனது ட்விட்டரில் கூறியுள்ளதாவது: சென்னை PSBB பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் ஆபாசமாக நடந்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.இது போன்ற புகார்களை பள்ளி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்துள்ளதாக தெரிகிறது. குற்றம் புரிந்த ஆசிரியர் மீதும்,பள்ளி நிர்வாகிகள் மீதும் உடனடியாக கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும்..
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications