இளையராஜாவை நிர்மலா சீதாராமன் 2 அடி தள்ளி நிற்க வைத்தது சனாதனம்- பெரியார் இயக்கம் குற்றச்சாட்டு!
சென்னை: சென்னை புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்ற மேடையில் இசைஞானி இளையராஜாவை 2 அடி தள்ளி நிற்க வைத்தது சனாதனம் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னையில் நேற்று மால்யதா Maalyada: The Sacred Garland என்கிற ஆண்டாள் திருப்பாவையை விவரிக்கும் ஆங்கில நூல் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராமாயணத்தை பற்றி, எங்க ராம ராம ராமன்னு சொல்றோமோ அங்க வந்துடுவார் அவரு.. ஆக்சுவலா எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. இட் இஸ் வெரிபைட்.. அதனால சொல்றேன். அயோத்தியா வெர்டிக்ட் (அயோத்தி வழக்கு தீர்ப்பு) வந்த போது, அந்த ஜட்ஜ் கோர்ட்டில் சொல்லும் போது.. நீங்க வேணும்னா Fake- ஆ? இல்லையா?ன்னு டபுள் வெரிபை செய்து கொள்ளுங்க.. நீங்க பத்திரிகைகாரங்க.. ஆஞ்சநேயரோட பின் தலைமுறை.. கோர்ட் மேல உட்கார்ந்திருக்கிறதாம். நம்பனும்னா நம்புங்க.. இல்லைன்னா இல்லை.. இதென்ன இந்தம்மா இதை பேசுதுன்னா ஓ தாராளமா அதையும் சொல்லிக்கோங்க.. பட் பகவன் நாமா சொல்ற இடத்தில் ஆஞ்சநேயர் வருவார் என்பது நமக்கு ஆழ்ந்த நம்பிக்கை என கூறியிருந்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜா, நான் இசைஞானி பட்டத்துத் தகுதியானவன் இல்லை. தற்போது இருக்கும் இசையமைப்பாளர்கள் ஒரு பாடலை இசை அமைக்க ஒரு கஆண்டு எடுத்துக் கொள்கின்றனர். திருவாசகத்தை ஒலிப்பதிவு செய்ததைப்போல திவ்யப் பிரபந்தத்தையும் ஒலிப்பதிவு செய்து வைத்திருக்கிறேன். உரிய நேரத்தில் அதை வெளியிடுகிறேன். எனக்கு எந்த கர்வமும் கிடையாது. அதையெல்லாம் நான் சிறு வயதிலேயே தூக்கி எறிந்துவிட்டேன் என்றார்.
இளையராஜா'வை இரண்டு அடி தள்ளி நிற்க வைத்ததில் இருக்கிறது சனாதனம்!!!! pic.twitter.com/7g1pYBPkhh
— Thandhai Periyar DK தபெதிக (@TPDK2020) January 5, 2024
இந்த நிலையில் இப்புத்தக வெளியீட்டு விழா படத்தை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து அதில், "இளையராஜா'வை இரண்டு அடி தள்ளி நிற்க வைத்ததில் இருக்கிறது சனாதனம்" என பதிவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications