திரையரங்குகள் திறப்பு, கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி: அரசு அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் இயங்கும் கடைகளில் வியாபாரிகள் தடுப்பூசி செலுத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் ஆலோசனை
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடந்தது இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மருத்துவ வல்லுநர்கள், பல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பள்ளிகள் திறப்பு
தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை 6 மணியுடன் நிறைவு பெறும் நிலையில் தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செம்படம்பர் 1-ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படும்.

மதிய உணவு திட்டம்
இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேற்படி உயர்வகுப்புகள் செயல்படுவதைக் கவனித்து அதன் அடிப்படையில் மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை செப்டம்பர் 15-ம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும்.

கல்லூரிகள் திறப்பு
அனைத்து கல்லூரிகளும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகள், தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அனைத்து பட்டயப்படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.

தியேட்டர்கள் திறக்க அனுமதி
ஆகஸ்ட் 23 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிப்பில் கூறப்பட்டுளள்து. ஆனால் 50% பார்வலையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆந்திரா,கர்நாடாகா மாநிலங்களுக்கு பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகாவுக்கு பஸ்
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரள மாநிலத்துக்கு பஸ் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படவில்லை. விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் இயங்கும் மது பார்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடைகள் செயல்படும் நேரம்
உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். இதுவரை இரவு 9 மணி வரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும் 23-ம் தேதியிலிருந்து இரவு 10 மணிவரை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications