சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

3 படகுகளில் ஒரே நேரத்தில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கு உண்டு... ஜெயக்குமார் விமர்சனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் திமுகவுக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் மட்டுமே உண்டு என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் கோட்சே என்று கமல்ஹாசன் கூறியுள்ளார். இதற்கு, மன்னிப்பு கேட்காவிட்டால் கமல் நாக்கை அறுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையாக பேசினார்.

The DMK has the ability to travel in 3 boats at the same time, Says Minister Jayakumar

அதேபோல், பாஜகவுடன் கூட்டணி வைக்க பேசி வருகிறேன் என பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை, பொய் பேட்டி அளித்ததற்காக வேதனைப்படுகிறேன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்கமார், தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்ற திருக்குறளை சுட்டிக்காட்டி, கமல்ஹாசன், ராஜேந்திரபாலாஜி என யாராக இருந்தாலும் நாவை அடக்கி பேசவேண்டும் என்றார். யாரையும் பாதிக்காத வகையில் பேச வேண்டும், இது அனைவருக்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

தமிழிசை நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஓட வேண்டும்.. ஸ்டாலின் அதிரடிதமிழிசை நிரூபிக்க வேண்டும்.. இல்லாவிட்டால் அரசியலை விட்டு ஓட வேண்டும்.. ஸ்டாலின் அதிரடி

மேலும், ஒரே நேரத்தில் 3 படகில் பயணம் செய்யும் சாமர்த்தியம் மு.க.ஸ்டாலினுக்கு இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல, டிடிவி தினகரன் ஜெயலலிதாவை விமர்சிக்க துணிந்துவிட்டதாகவும் ஜெயக்குமார் கடுமையாக சாடினார்.

முன்னதாக, திமுகவை பொறுத்தவரை அரசியல் கொள்கை கிடையாது என்றும், பதவி, பணம் தான் முக்கியம் என்று ஸ்டாலின் - சந்திரசேகர் ராவ் சந்திப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

English summary
Minister Jayakumar Said that DMK has the ability to travel in 3 boats at the same time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X