போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது.. ரஜினிகாந்த் பாராட்டு
சென்னை: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள 9 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் மத்திய அரசும் பங்கரவாதிகளுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியது.

ஆபரேஷன் சிந்தூர்
பிரதமர் மோடியும் காஷ்மீரில் அமைதி நிலவுவதை பயங்கரவாதிகள் விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு கனவிலும் நினைத்து பார்க்க முடியாத பதிலடி நிச்சயம் வழங்கப்படும் என்று கூறியிருந்தார். மேலும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இந்த விவகாரத்தில் பாடம் புகட்ட வேண்டும் என்று அந்நாடு மீது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், இந்திய துறைமுகங்களுக்குள் பாகிஸ்தானிய கப்பல்கள் வர தடை என அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டது. மேலும் இன்று நாடு முழுவதும் 259 இடங்களில் போர் ஒத்திகை நடைபெறும் என்றும் அறிவித்தது. இதனால் பாகிஸ்தான் மரண பீதியில் இருந்து வந்தது.
25 நிமிடம் தான்
இந்த நிலையில் பாகிஸ்தானே எதிர்ப்பார்க்காத நேரத்தில் நேற்று நள்ளிரவு இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்தியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தியது. சரியாக 25 நிமிடத்தில் இந்த தாக்குதலை கணக்கச்சிதமாக இந்தியா செய்து முடித்தது. பொதுமக்கள் மீது ஏதும் தாக்குதல் நடத்தாமல், பயங்கரவாதிகளின் முகாம்களை மட்டுமே குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது.
ரஜினிகாந்த், விஜய் பாராட்டு
இதனால் உலக நாடுகள் பலவும் இந்தியாவின் இந்த நடவடிக்கையினை பாராட்டியது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இந்தியாவின் இந்த துல்லிய தாக்குதல் நடவடிக்கையினை பாராட்டியுள்ளார். இது குறித்து ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- போராளியின் போர் தொடங்கிவிட்டது.. மொத்த தேசமும் மோடியுடன் நிற்கிறது. எடுத்த காரியம் முடியும் வரை ஓயப்போவதில்லை. என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதேபோல் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய்யும் இந்திய ராணுவத்திற்கு ராயல் சல்யூட் என்று பாராட்டியுள்ளார். முன்னதாக இந்தியாவின் இந்த நடவடிக்கையால், அழுது புலம்பும் பாகிஸ்தான் இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என்று தெரிவித்து உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் தவிடுபொடியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானும் பதிலடி கொடுக்கப்படும் என்று கூறியிருப்பதால் மேலும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. பரபரப்பான இந்த சூழலில் தான் இன்று நாடு முழுவதும் போர் ஒத்திகை நடைபெறுகிறது. அமெரிக்கா, ரஷ்யா என உலக நாடுகள் பலவும் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications