மஞ்சள் தாலி கட்டிய கணவர்.. கத்தை கத்தையாக பணம்.. இரவெல்லாம் அழுத இளம் மனைவி.. அடுத்து நடந்த சம்பவம்
சென்னை: கல்வி அதிகரித்தாலும், வரதட்சணை பிரச்சனை இன்னும் அதிகரித்து வருகிறது. பெண்கள் படிக்கிறார்கள், வேலை செய்கிறார்கள், ஆனாலும் வீட்டில் பொறுப்புகள் குறையவில்லை. குடும்ப சுமை, உறவினர்களின் எதிர்பார்ப்பு மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது.., சின்ன சின்ன பிரச்னைகளும் பெரும் சுமையாக மாறிவிடுகிறது...சிலர் மனஅழுத்தத்தை தாங்க முடியாமல், தற்கொலையை நாடுகிறார்கள்.. இதோ இந்த பெங்களூர் சம்பவத்தை பாருங்கள்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனசங்கரி போலீஸ் எல்லை பகுதியில் வசித்து வருபவர் குருபிரசாத்.. இவர் கீர்த்தி என்ற பெண்ணை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார்..

வரதட்சணை கொடுமை
இந்த திருமணத்திற்கு கீர்த்தியின் பெற்றோர் ரூ.35 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தம்பதி சந்தோஷமாகவே வாழ்ந்து வாழ்ந்தனர். குருபிரசாத் சொந்தமாக வீடு கட்டவும் முயற்சி செய்தார். ஆனால் இதற்காக அதிக பணம் தேவைப்பட்டதால், தனது மனைவியிடம் பெற்றோரிடமிருந்து கூடுதல் பணம் வாங்குமாறு டார்ச்சர் தர ஆரம்பித்து விட்டார்,..
கீர்த்தி இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.. கல்யாணத்துக்கே தன்னுடைய பெற்றோர் அதிக செலவு செய்துவிட்டதால், அவர்களிடம் மீண்டும் சென்று தன்னால் பணம் கேட்க முடியாது என்றார்.. அதற்கு நேரத்தில் குருபிரசாத், வரதட்சணை குறைவாக போட்டார்களே? என்று சொல்லி கடந்த இரண்டு மாதங்களாக மனைவியை தொடர்ச்சியாக துன்புறுத்தி வந்தார். இதனால் கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளானார் கீர்த்தி..
கூடுதல் பணம்
பெற்றோரின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, கூடுதல் பணம் கேட்க முடியாமல் மனமுடைந்து காணப்பட்டார். கடந்த 24-ந்தேதி இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
தன் பெற்றோரிடமும் பணம் கேட்க முடியாமல், கணவரையும் சமாளிக்க முடியாமல் கீர்த்தி அன்றைய தினமே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்..
பரிதாப கீர்த்தி
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே கீர்த்தியின் பெற்றோர் பதறியடித்துகொண்டு ஓடிவந்தார்கள்.. மகளின் சாவுக்கு கணவர் குருபிரசாத் மற்றும் அவரது குடும்பத்தினர் காரணமானதாக பெற்றோர் புகார் அளித்தனர். பனசங்கரி போலீஸ் குருபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. போலீஸ் விசாரணையின் பிறகு சம்பவத்தின் முழு காரணங்கள் வெளிப்படும் என்று தெரிகிறது..
ஆனால் வரதட்சணை சம்பந்தமான மனஅழுத்தங்கள், குடும்ப உறவுகளில் முரண்பாடுகள், பெண்களின் மனநலத்திற்கு நேர்மறையான பாதிப்புகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க சமூக விழிப்புணர்வு மற்றும் குடும்ப ஆலோசனைகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டியிருக்கிறது...!!












Click it and Unblock the Notifications