சென்னையை வாட்டி வதைக்கப்போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.. கவனம் மக்களே..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலம் துவங்க இன்னும் ஒரு மாத கால இடைவெளி இருக்கும் நிலையில் தற்போது கடும் வெயில் கொளுத்தி வருகிறது.

பகல் நேரங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் இரவு நேரங்களிலும் தகிப்பதால் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

அதிக வெப்பநிலை

அதிக வெப்பநிலை


இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி "இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு

மழைக்கு வாய்ப்பு

27ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28ஆம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னை வானிலை

29ஆம் தேதி தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். 3ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.

மழை பதிவு விபரம்

மழை பதிவு விபரம்

கடந்த 24 மணி நேரத்தில் சூலூர் (கோயம்புத்தூர்) 3 செமீ., குந்தா பாலம் (நீலகிரி), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்) தலா 2 செமீ, கொடைக்கானல் (திண்டுக்கல்), ஆழியாறு (கோயம்புத்தூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), மன்னார்குடி (திருவாரூர்), கின்னகோரை (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), அவலாஞ்சி (நீலகிரி) தலா 1 செமீ மழை பதிவாகியுள்ள நிலையில், மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை" என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+