சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"புரியாத புதிர்".. இந்த ஒரு கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவே இல்லை.. குழப்பி எடுத்த மாண்டஸ் புயல்

Google Oneindia Tamil News

சென்னை: மாண்டஸ் புயல் தமிழ்நாட்டை நெருங்கி வரும் நிலையில், இந்த மாண்டஸ் புயல் குறித்த முக்கியமான கேள்வி ஒன்றிற்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த வடகிழக்கு பருவமழை சீஸனின் முதல் புயல் வங்கக்கடலில் உருவாகி உள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த மாண்டஸ் தமிழ்நாட்டை நோக்கி வேகமாக வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு தென்கிழக்கே 260 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது. இன்று இரவு சென்னைக்கு அருகே கடல் பகுதியை இந்த புயல் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரைக்காலுக்கு தென்கிழக்கில் 200 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் உள்ளது.

நெல்லை, தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் நெல்லை, தென்காசியில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

புயல்

புயல்

இந்த மாண்டஸ் புயல் தொடர்பாக பல்வேறு கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டால் ஒரு கேள்விக்கு மட்டும் இன்னும் பதில் கிடைக்கவே இல்லை. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கிறது. பெரும்பாலும் நள்ளிரவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சில தாமதங்கள் ஏற்பட்டால் புயல் நாளை அதிகாலை கூட கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. இதில் சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக குழப்பம் ஏற்படவில்லை. ஆனால் புயலின் வலிமையில்தான் இன்னும் குழப்பங்கள் நிலவி வருகிறது.

சந்தேகம்

சந்தேகம்

இந்த புயல் தற்போது அதி தீவிர புயலாக உள்ளது. நேற்று அதி தீவிர புயலாக இது வலிமை பெற்றது. வங்கக்கடலில் தீவிர காற்று வெட்டு நிலவி வருகிறது. அதேபோல் வறண்ட காற்றும் நிலவி வருகிறது. இதன் காரணமாக இந்த புயல் அதி தீவிர புயலாக மாறுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால் அதை மீறி இந்த புயல் அதி தீவிர புயலாக மாறி உள்ளது. தற்போது அதி தீவிர புயலாக தமிழ்நாடு நோக்கி மாண்டஸ் நகர்ந்து கொண்டு இருக்கிறது.

குழப்பம்

குழப்பம்

ஆனால் இது கரையை கடக்கும் போது எவ்வளவு வலிமையாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கரையை கடக்கும் போது புயலின் வலிமை எப்படி இருக்கும் என்பதில் இப்போதும் குழப்பம் நிலவி வருகிறது. புயல் அதி தீவிர புயல் என்ற நிலையில் இருந்து சாதாரண புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அதாவது கரையை கடக்கும் முன் புயல் வலிமை இழக்கும். அதன்பின்பே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 நிலவரம் என்ன?

நிலவரம் என்ன?

ஆனால் பல்வேறு தனியார் வானிலை அமைப்புகள், வானிலை கணிப்பு மாடல்கள் இதற்கு எதிராக கணிப்புகளை வெளியிட்டு உள்ளன. அதாவது புயலுக்கு எதிராக சூழ்நிலை எதுவும் நிலவவில்லை. இதனால் புயல் அதிதீவிர புயலாகவே நீடிக்கும். அதி தீவிர புயலாகவே இது கரையை கடக்கும். இது கடைசி வரை வலிமை இழக்க வாய்ப்பு இல்லை என்று தனியார் வானிலை அமைப்புகள் கூறி உள்ளன. இதனால் புயல் கரையை கடக்கும் போது உண்மையில் எவ்வளவு வேகத்துடன், வலிமையுடன் இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

English summary
The one answered question on Mandous cyclone landfall and How does it affect Tamil Nadu weather?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X