"இப்போ விட்டாலும் கோவில் தேரை கொளுத்துவேன்.." திரும்ப திரும்ப பேசிய வாலிபர்.. மக்கள் தர்ம அடி
சென்னை: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி களத்தூர் கிராமத்தில் இந்து கோவில் தேரை கொளுத்த வந்த ஆசாமியை கையும் களவுமாக பிடித்துள்ளனர் பொதுமக்கள். "இப்ப விட்டாலும் கொளுத்துவேன் பார்க்கிறீர்களா.." என்று அந்த வாலிபர் கேட்டதால், அதிர்ந்து போயினர் மக்கள்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூர் கிராமத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இன்று காலை சுமார் 7 மணி அளவில் வாலிகண்டபுரம் கிராமத்தைச் சார்ந்த ஒரு இளைஞர், வி.களத்தூர் பகுதியிலுள்ள இந்து கோவிலுக்கு சொந்தமான இரண்டு தேர்களின் பூட்டை உடைத்து தீ வைத்து கொளுத்த முயன்றுள்ளார்.

இதை அந்த ஊர் மக்கள் சிலர் பார்த்து பதறிவிட்டனர். உடனே ஓடிச் சென்று அந்த வாலிபரை பிடித்து அடித்து உதைத்தனர். ஆசாமியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அந்த வாலிபர் பேசியதை பார்த்து ஊர் மக்களுக்கு ஒன்றுமே ஓடவில்லை. கடந்த சில வருடங்களாக இந்த தேர்கள் பூட்டி கிடக்கின்றன. நீதிமன்றம் ஆர்டர் கொடுத்த பிறகும் கூட தேர் ஓடவில்லை. அதனால் நான் இதன் உள்ளே என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ள உடைத்து தீ வைக்க வந்தேன் என்று கூறியுள்ளார் அந்த வாலிபர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தில் கோவிலில் உள்ளே திடீரென தீவிபத்து ஏற்பட்டு சாமி பொருட்கள் வைக்கும் மண்டபம் தீப்பற்றி எரிந்தன. திடீரென இந்த இடத்தில், எப்படி தீ பற்றி எரிந்து என்று பொதுமக்கள் நினைத்திருந்த நிலையில் இன்று இந்த வாலிபர் தீ வைக்க முயன்றபோது சிக்கியுள்ளதால், பழைய சம்பவத்தின் பின்னணியிலும் இந்த வாலிபர்தான், இருப்பார் என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது.
பிடிபட்ட நபரிடம், இந்த தீ வைப்புக்கு பின்னணியில் வேறு யாராவது இருக்கிறார்களா என்று மக்கள் கேட்டபோது, அப்படியெல்லாம் இல்லை.. நான்தான் கொழுத்த வந்தேன். உள்ளே என்ன இருக்கிறது என்பதை பார்க்கத்தான் வந்தேன் என்று திரும்ப திரும்ப கூறுகிறார். ஒரு கட்டத்தில், மக்களில் சிலரே, என்ன நீ, வடிவேலு மாதிரி திரும்ப திரும்ப பேசுற என்று கேட்கிறார்கள். இவை அனைத்தும், செல்போனில் வீடியோவாக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா, மத ரீதியான பிரச்சினைகள் இதன் பின்னணியில் உள்ளதா என்பது குறித்தெல்லாம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications