ரயில் விபத்திற்கான காரணங்களை சரியாக கண்டறிய வேண்டும்! மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
சென்னை: 233 பேரின் உயிர்களை பலி வாங்கிய கோரமண்டல் ரயில் விபத்திற்கான காரணங்களை கண்டறிந்து எதிர்காலத்தில் இது போன்ற விபத்துக்கள் நிகழாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மமக தலைவர் ஜவாஹிருல்லா மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
விபத்தில் காயமடைந்தோர் விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்வதாகவும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவு வருமாறு;

''மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒரிசா மாநிலத்தில் விபத்துக்குள்ளாகி 50 மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது.
விபத்தில் சிக்கியுள்ளவர்களை விரைவாக மீட்கவும் காயம் அடைந்தவர்களை மீட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஒன்றிய மற்றும் ஒடிசா மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தக் கோர விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் நலம் பெறப் பிரார்த்தனை செய்கிறேன்.
இந்தக் கோர விபத்திற்கான காரணங்களை அறிந்து இது போல் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க ரயில்வே நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.'' இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications