குட் நியூஸ்.. பள்ளிக் கல்வித் துறை உதவியாளர் பணியிடங்கள்.. அக்டோபர் 6 இல் கலந்தாய்வு
சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறையில் நிரப்பப்படாமல் உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அக்டோபர் 6 ஆம் தேதி அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: டிஎன்பிஎஸ்சி சாா்பில் 2024-ஆம் ஆண்டு நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு 2ஏ (நோ்முகத் தோ்வு அல்லாத பணியிடங்கள்) தோ்வுகள் மூலம் தோ்ச்சி பெற்று பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்டவா்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அக்டோபர் 6 ஆம் தேதி (திங்கள்கிழமை) அந்தந்த மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இணைய வழியில் நடைபெறவுள்ளது.

எனவே, மேற்கண்ட உதவியாளா் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவா்கள் தங்களுடைய தேர்வுக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அக்டோபர் 6 ஆம் தேதி கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலந்தாய்வில் கலந்து கொள்வோா் டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கடிதம் மற்றும் அனைத்துக் கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் சான்றொப்பமிட்ட நகலை சரிபாா்ப்புக்கு எடுத்து வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு மொத்தம் 160 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications