Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணாமலையை நோக்கி குறி.. விஜயகாந்துக்கு செய்த அதே சூழ்ச்சி.. இயக்குனர் பேரரசு ஏன் இப்படி சொன்னாரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்தை சிலர் காமெடி ஆக்கிவிட்டார்கள். அதேபோல் சில கட்சிகளின் ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் என திரைப்பட இயக்குனரும், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு துணை தலைவருமான பேரரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை உள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ்ஸாக பணியாற்றிய அண்ணாமலை அதனை ராஜினாமா செய்தார். அதன்பிறகு சிறிது காலம் ஓய்வில் இருந்த அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்.

தற்போது அவர் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டின் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆளும் திமுக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம், பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.

 அண்ணாமலை - பத்திரிகையாளர் மோதல்

அண்ணாமலை - பத்திரிகையாளர் மோதல்

இந்நிலையில் தான் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு என்பது அடிக்கடி சர்ச்சையாக மாறிவிடுகிறார். ஏனென்றால் அவ்வப்போது பத்திரிகையாளர்களுக்கும், அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு விடுகிறது. இந்நிலையில் தான் 2 நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காயத்ரி ரகுராம் கட்சியிலிருந்து விலகியது குறித்தும், அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் பற்றியும், அவரது ரபேல் வாட்ச் பற்றியும் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

மீண்டும் வெடித்த மோதல்

மீண்டும் வெடித்த மோதல்

இந்த வேளையில் அண்ணாமலை திடீரென்று டென்சனார். ஊடகங்களின் பெயரை கேட்டு அவர்களையும் ஊடகங்களையும் விமர்சித்தார். மேலும் தான் தரும் ஆதாரங்களின் அடிப்படையில் அரை மணிநேரம் செய்தி வெளியிடும்படி குறிப்பிட்ட தொலைக்காட்சியின் நிருபரிடம் கூறினார். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் அண்ணாமலைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பத்திரிகையாளர்களிடம் நாகரீகமற்ற முறையில் அண்ணாமலை நடந்து கொள்வதாக அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இயக்குனர் பேரரசு

இயக்குனர் பேரரசு

இது ஒருபுறம் இருக்க பாஜக தலைவர்கள் அண்ணாமலைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் சிலர் குறிப்பிட்ட அஜென்டாவுடன் பத்திரிகையாளர் போர்வையில் வந்து கேள்விகள் கேட்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு அண்ணாமலையின் பாணியில் தான் பதில் அளிக்கப்படும் எனக்கூறி வருகின்றனர். இந்நிலையில் தான் திரைப்பட இயக்குனரான பேரரசு அண்ணாமலைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சரானபாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து பாஜகவில் இணைந்த நிலையில் சமீபத்தில் பதவியையும் பெற்றார். தற்போது பாஜகவின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநிலத் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

ட்விட்டரில் கூறியது என்ன?

ட்விட்டரில் கூறியது என்ன?

இந்நிலையில் தான் இயக்குனர் பேரரசு தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛அரசியலுக்கு வந்த நல்ல மனிதர் விஜயகாந்த. கட்சி சார்ந்த சில பத்திரிகையாளர்களின் நடவடிக்கையால் அந்த நல்ல மனிதரை காமெடி ஆக்கிவிட்டார்கள். தற்பொழுது அதேபோல் ஒரு சில கட்சிகளின் ஏவுகணையாக அண்ணாமலையிடம் அதே சூழ்ச்சியை மேற்கொள்கிறார்கள். இங்கே சூழ்ச்சி வீழ்ச்சியாகும் என தெரிவித்துள்ளார்'' என தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+