கொரோனாவால் இறந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம்.. மனிதஉரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
சென்னை: கொரோனா தொற்று பாதித்து உயிரிழந்தவரின் உடலை 2 மாதங்கள் கழித்து கொடுத்த விவகாரம் தொடர்பாக மனித உரிமை ஆணையத்தின் டிஜிபி பதிலளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அலமேலு என்பவர் கொரோனா தொற்று பாதித்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மே 19ம் தேதி அனுமதிக்கபட்டார். சிகிச்சை பலனின்றி மே 22ம் தேதி உயிரிழந்த அவரது உடலை எரித்துவிட்டதாக அவரது உறவினர்களிடம் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்தநிலையில், ஆகஸ்ட் 9ம் தேதி அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம் உடலை பெற்றுகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இதனால் அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபடும் என்று உறுதி அளித்ததையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை திரும்ப பெற்றனர். உடலை எரிக்க 3ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் புகார் அளித்தனர்.
இது சம்பந்தமாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் இது தொடர்பாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்தின் டிஜிபிக்கு உத்தரவிட்டார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications